பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான சாந்தனு தேஷ்பாண்டே, லிங்க்டினில் ஒரு முக்கியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த கருத்து பலரையும் புதிய வகையில் யோசிக்க தூண்டியுள்ளது என்றால் மிகையில்லை.
இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவு பணியாளர்கள் தங்கள் வேலையை உண்மையிலேயே விரும்புவதில்லை மற்றும் நிதி தேவையின் காரணமாகவே தொடர்ந்து பணியாற்றுகின்றனர் என்று சாந்தனு தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

இந்தியாவில் பெரும்பாலான நபர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் அடிப்படை வாழ்வாதாரம் வழங்கப்பட்டால், 99 சதவீத மக்கள் வேலைக்கே வரமாட்டார்கள் என்று சாந்தனு தேஷ்பாண்டே கூறுகிறார். அவர்கள் வேலைக்கு வர முக்கியமான காரணம் நிதி தேவை மட்டுமே.
இது ப்ளூ காலர் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் முதல் கிக் தொழிலாளர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், காப்பீட்டு விற்பனையாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் சிறு நிறுவனத்தின் உரிமையாளர்கள் வரையில் இது பொருந்தும். இதோடு புதிய தலைமுறை நிறுவனங்கள் ஜாலியாக, மன அழுத்தம் இல்லாமல் இயக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் இதே நிலை தான் என சாந்தனு தேஷ்பாண்டே கூறுகிறார்.
இப்படி ஊழியர்களுக்கு நிதிநிலையைப் பயன்படுத்தி இந்தியாவில் 250 வருடங்களாகச் சம்பளத்திற்காக நேரம் பார்க்காமல், நாள், கிழமை பார்க்காமல், குடும்பத்தை மறந்து தொடர்ச்சியாக வேலை செய்யும் கலாச்சாரம் இருந்து வருகிறது. இதில் பெரும் குறைபாடுகள் இருந்தபோதிலும், இன்றைய நிலையில் இயல்பாகவே மாறிவிட்டது, இதை நிறுவனங்களும் எவ்விதமான தயக்கமும் காட்டாமல் செய்கின்றன, இப்படி தான் நம்முடைய நாட கட்டமைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேவேளையில் இந்தியாவில் wealth gap பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதையும் தேஷ்பாண்டே சுட்டிக்காட்டினார். நாட்டின் செல்வத்தில் பெரும்பகுதியை சுமார் 2,000 குடும்பங்கள் மட்டுமே கட்டுப்படுத்துகின்றன.
இந்த 2000 குடும்பங்கள் நாட்டின் மொத்த வரி வசூலில் 1.8 சதவீதத்திற்கும் குறைவான பங்களிப்பை மட்டுமே செய்கிறது, இதனால் நாட்டிற்குள் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கின்றன.
சாந்தனு தேஷ்பாண்டே கடைசியாக இந்தியாவில் இருக்கும் வேலை கலாச்சாரத்தின் தன்மை, ஊழியர்களின் நலன், wealth gap ஆகியவற்றுக்கு மத்தியில் சமநிலையை உருவாக்க அனைவரும் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications