டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்துவது என ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப் படியில் 2 சதவீதம் உயர்த்தி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறோம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 48.6 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் ,66.55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள். மத்திய அரசு ஊழியர்கள் இதுநாள் வரை தங்களின் அடிப்படை சம்பளத்தில் 53 சதவீதம் தொகையை அகவிலைப்படியாக பெற்றனர். அது 55 சதவீதமாக உயர்கிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் சம்பளமும் உயரும்.

ஏழாவது சம்பள கமிஷன் வெளியிட்ட பரிந்துரை மற்றும் ஃபார்முலாக்களின் அடிப்படையில் தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 50 லிருந்து 53 சதவீதமாக மாறியது. மத்திய அரசு பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.
ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனால் நிர்ணயம் செய்யப்படுகிறது, இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வதை கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை அரசு வெளியிடுகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும். கடந்த ஜூலைக்கு பிறகு அகவிலைப்படி தொடர்பான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. ஜனவரியிலேயே வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் தற்போது தான் அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஏப்ரல் மாத சம்பளத்தோடு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான அரியர் தொகையும் சேர்த்து ஊழியர்களுக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த 2 சதவீத அகவிலைப்படி உயர்வினால் மத்திய அரசில் நுழைவு நிலையில் இருக்கக்கூடிய அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக இருக்கும் ஊழியர்களுக்கு மாதம் தோறும் 360 ரூபாய் சம்பளத்தில் சேர்த்து கிடைக்கும்.
அதாவது 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொண்ட ஒரு நபரின் அடிப்படை சம்பளம் அதில் 18, 000 என்றால் அவருக்கு தற்போது 9540 ரூபாய் அகவிலைப் படியாக வழங்கப்படுகிறது. இதில் தற்போது இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதால் இனி 9,900 ரூபாயாக அகவிலைப்படி கிடைக்கும்.
More From GoodReturns

மோடியின் திடீர் அவசர CCS கூட்டம்.. எதற்காக ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்..? என்ன நடந்தது..?!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications