இந்தியாவில் உற்பத்தி துறைக்குப் பெயர்போன தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தொழில்துறை இயந்திர உற்பத்தியாளரான போன்ஃபிகிலியோலி (Bonfiglioli), செய்யார் சிப்காட்-ல் புதிதாக ரூ.320 கோடி முதலீட்டில் உற்பத்தி தளத்தை அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் 25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
இது மட்டும் அல்லாமல் சென்னையில் ஒரு புதிய உலகளாவிய தொழில்நுட்ப மையத்தையும் நிறுவுகிறது, இந்த டெக் அலுவலகத்தில் சுமார் 200 பேர் பணியாற்றுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போன்ஃபிகிலியோலி நிறுவனம் எக்ஸ்கவேட்டர்கள் முதல் சாலை கட்டுமான இயந்திரங்கள் வரையிலான மொபைல் இயந்திரங்களுக்கான கியர்பாக்ஸ்கள் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்றது. மேலும் சந்தையில் பல துறைகளுக்குச் சேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் தேவையும் பூர்த்தி செய்யும் வகையில் பல பொருட்களைத் தயாரித்து வருகிறது.
செய்யார் சிப்காட் தொழில்துறை பூங்கா திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யார் தாலுக்காவில் அமைந்துள்ளது. இந்த தொழில்துறை பூங்கா 931.015 ஹெக்டேர்கள் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த பூங்கா சென்னைக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், KH4 க்கு 23 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு 14 கிலோமீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரம்-செய்யார் சாலையில் அமைந்துள்ளது.
செய்யார் சிப்காட் அமைந்துள்ள இடம் உள்நாட்டு வர்த்தகத்தின் விநியோகத்திற்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் ஏதுவாக உள்ளது.
தமிழ்நாடு மாநில தொழில் ஊக்குவிப்பு கழகம் (SIPCOT) தான் செய்யார் சிப்காட் தொழில்துறை பூங்காவை உருவாக்கியது. SIPCOT நிர்வாகம் இங்கு ஒரு நிறுவனத்திற்குத் தேவையான சாலைகள், நீர் வழங்கல், நிர்வாக அலுவலகங்கள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதிகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் கட்டமைத்துள்ளது. SIPCOT கடந்த 52 ஆண்டுகளில் 3,275 தொழில்துறை அலகுகளை நிறுவி வளர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications