சென்னை: இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான IndiGo, தனது பயணிகளுக்கான விமான முன்பதிவு செயல்முறையை எளிதாக்கும் நோக்கில், வாட்ஸ்அப்பில் "6Eskai" என்ற AI சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் ரியாஃபி டெக்னாலஜிஸ் உடன் இணைந்து இந்த AI சாட்போட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான அம்சத்தின் மூலம், பயணிகள் விமான நிறுவனத்துடன் தொடர்பு கொள்வது எளிதாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
6Eskai AI சாட்போட்டை எவ்வாறு பயன்படுத்துவது?: 6Eskai AI சாட்போட்டை பயன்படுத்த, பயணிகள் வாட்ஸ்அப்பில் "+91 7065145858" என்ற எண்ணுக்கு "Hi There" என்ற மெசேஜ்-ஐ அனுப்பலாம். விமான முன்பதிவுகள், வெப் செக்-இன்கள், போர்டிங் பாஸ்கள் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களுடன் சாட்போட் உடனடியாக பதிலளிக்கும்.

பயனர்கள் அதில் "விமான டிக்கெட் முன்பதிவு" என்பதைத் தேர்ந்தெடுக்கலாம், தங்கள் பயண விவரங்களை என்டர் செய்தால், கிடைக்கும் விமானங்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்யலாம் மற்றும் ஆன்லைன் கட்டணத்துடன் டிக்கெட் முன்பதிவை எளிதில் முடிக்கலாம்.
6Eskai AI சாட்போட்டின் அம்சங்கள் மற்றும் சேவைகள்: 6Eskai AI சாட்போட்டின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தல், செக்-இன்களை எளிதாக்குதல், போர்டிங் பாஸ்களை உருவாக்குதல் மற்றும் பொதுவான பயண விசாரணைகளை வாட்ஸ்அப்-பில் எளிதில் தெரிந்து கொள்ளும் உதவியாளராக செயல்படுகிறது. மேலும், 6Eskai ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பயன்படுத்த முடியும்.
நோக்கம் மற்றும் நன்மைகள்: 6Eskai-ஐ அறிமுகப்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு வசதி மற்றும் திருப்தியை மேம்படுத்துவதற்கான இண்டிகோவின் அர்பணிப்பைக் குறிக்கிறது. வாட்ஸ்அப்பில் பயணம் தொடர்பான சேவைகளுக்கான ஒரே தளத்தை வழங்குவதன் மூலம், இண்டிகோ எளிதான பயண அனுபவத்தைத் தேடும் அதிக பயணிகளை ஈர்க்க முடியும் என்று நம்புகிறது.
இண்டிகோவின் தலைமை டிஜிட்டல் மற்றும் தகவல் அதிகாரியான நீதன் சோப்ரா, 6Eskai அறிமுகம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "எங்கள் AI-உதவியாளர் 6Eskai, வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் விருப்பமான விமான நிறுவனமாக, மாறுவதற்கு IndiGo உறுதி எடுத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த டிஜிட்டல் சேவைகளை வழங்குவது, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications