சென்னை: சொந்தமாக தொழில் முனைவோருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் பொருட்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த தேசிய கால்நடை இயக்கம் (நேஷனல் லைவ்ஸ்டாக் மிஷன்). இந்த திட்டத்தினை கால்நடை பராமரிப்பு மற்றும் கோழிப் பண்ணை துறை நிர்வகிக்கிறது. இந்த திட்டத்தைப் பயன்படுத்தி இறைச்சி, பால், முட்டை மற்றும் கம்பளி உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கால்நடை வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் பயன் பெற முடியும்?: இந்தத் திட்டத்தினை பயன்படுத்தி கோழி, பன்றி மற்றும் தீவன உற்பத்திகளில் இருக்கும் நபர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். உழவர் உற்பத்தியாளர்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவற்றில் இருக்கும் நிறுவனங்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுடையவர்கள்.

இந்த தேசிய கால்நடை திட்டத்தின் மூலம் எவ்வளவு பணம் கிடைக்கும்?: இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் தொடங்கும் தொழிலை பொறுத்து மானியம் வழங்கப்படும். அதாவது நீங்கள் கோழிப்பண்ணை வைக்க இருக்கிறீர்கள், என்றால் ரூ. 25 லட்சம் மானியம் பெறலாம். ஆடு பண்ணை வைப்பதற்கு ரூ. ஐம்பது லட்சம் மானியம் பெறலாம். பன்றி பண்ணை வைப்பதற்கு நீங்கள் ரூ. 30 லட்சம் மானியம் பெற முடியும். மேலும், தீவனத் தொழில் தொடங்க ரூ. 50 லட்சம் மானியம் வழங்கப்படும்.
குதிரை, கழுதை, மற்றும் ஒட்டக தொழில்முனையும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் 50 சதவீத மூலதன மானியம் வழங்குவதன் மூலம் தேசிய கால்நடை இயக்கத்தை அரசாங்கம் சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் குதிரை, கழுதை மற்றும் ஒட்டகத்திற்கான கரு வளர்ப்புப் பண்ணையை நிறுவுவதற்கு மத்திய அரசு ரூ.10 கோடி வழங்குகிறது.
மேலும் சிலர் தங்களது தொழிலை பெரிய அளவில் தொடங்க வேண்டும் என்று கருதுவர். அத்தகைய சிலருக்கு இந்த மானியம் போதவில்லை என்றால் நீங்கள் வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மானிய தொகை ஒரே தவணையில் வழங்கப்பட மாட்டாது. அதன் முதல் தவணை திட்டத்தின் தொடக்கத்திலும் மட்டும் இரண்டாவது தவணை திட்டம் முடிந்த பின்னரும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://dahd.nic.in/schemes-programmes என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் 'நேஷனல் லைவ்ஸ்டாக் மிஷன்(NLM)' என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: அதன்பின் அந்த வெப்சைட் இன்னொரு வெப்பேஜ்ஜிற்கு உங்களை அழைத்துச் செல்லும். இப்போது ஸ்கிரீனில் தெரியும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
ஸ்டெப் 3: நீங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 21 நாட்களுக்குப் பிறகு உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? இல்லையா? என்ற தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications