சென்னை: நாளுக்கு நாள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) என்னும் தொழில்நுட்பத்தை சிலர் பிரம்மிப்புடனும், சிலர் அச்சத்துடனும் பார்க்கின்றனர். காரணம், எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளில் அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை குறித்து பலருக்கும் பல கேள்விகள் எழுகிறது. சிலர் இதுபோன்ற AI வளர்ச்சி வேலை சுமையை குறைக்கும் என்று நம்புகின்றனர். அதே நேரத்தில் இது போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து வேலைகளையும் செய்து கொண்டால், பின்னர் மனித வேலைக்கு இடம் இருக்காது என்று சிலர் அஞ்சுகின்றனர். இதுபோன்ற நபர்களுக்கு தற்போது வெளியான செய்தி சற்று அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக தான் இருக்கும். அது என்னவென்றால் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் சுமார் 51 மில்லியன் (சுமார் 5,817.93 ஆண்டுகள்) மணி நேரங்கள் சேமிக்கப்படுவதாக ஒரு ரிப்போர்ட் கூறுகிறது.
பியர்சன் நிறுவனம் "Reclaim the Clock: How Generative AI Can Power People at Work" என்ற பெயரிடப்பட்ட அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ஜெனரேட்டிவ் AI பயன்பாட்டின் மூலம் பணியாளர்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த தகவல்களை, இந்த அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதில் 2026ஆம் ஆண்டுக்குள் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 51 மில்லியன் மணிநேரங்களைச் சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரேட்டிவ் AI உதவியுடன், IT ஊழியர்கள் சுமார் 2.6 மில்லியன் மணி நேரங்களை சேமிக்க முடியும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சரியான பயிற்சி திட்டங்கள், வீடியோக்கள் போன்ற அனைத்தையும் தொழில்நுட்ப பிரிவுகளில் வேலை பார்க்கும் நபர்கள் எளிதில் கற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
உற்பத்தி துறை: உற்பத்தி துறையில் வாரத்திற்கு 1.8 மில்லியன் மணி நேரத்தைச் சேமிக்க முடியும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. உதாரணமாக, ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் பாதுகாப்பு பயிற்சி அளிப்பதற்கும், பாதுகாப்பு ஆய்வுகளை நடத்துவதற்கும் மேற்பார்வையாளர்களுக்கு உதவும்.
சட்டம்: சட்டத் துறையிலும் ஜெனரேட்டிவ் AI நேரத்தை மிச்சப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தத் துறையில் AI சரியாகப் பயன்படுத்தப்பட்டால், சுமார் 1.6 மில்லியன் மணி நேரத்தைச் சேமிக்க முடியும் என்று அறிக்கை கூறுகிறது. சட்ட நிபுணர்கள் ஆவணங்களின் துல்லியத்திற்காக செலவிடும் நூற்றுக்கணக்கான மணி நேரங்களை ஜெனரேட்டிவ் AI மூலம் மிச்சப்படுத்த முடியும்.
இதுபோன்ற AI தொழில்நுட்ப வளர்ச்சியால், இனிவரும் காலங்களில் அவரவருடைய திறன்களுக்கு அப்பால், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை யார் சிறந்த முறையில் பயன்படுத்துகிறார்களோ.. அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications