பிக்சட் டெபாசிட் கணக்கு திறப்பதற்கு முன்பு டெபாசிட் செய்பவர் வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்பொழுது தான் அதிக வட்டி விகிதத்தில் பலன் பெற முடியும். பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா போன்ற முன்னணி வங்கிகள் தங்களுடைய FD திட்டத்திற்கான வட்டி விகிதங்களை சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது. இந்தப் பதிவில் அதன் விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சிலர் தாங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ? அதே வங்கியைத் தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்வார்கள். ஆனால் இது போன்ற முதலீட்டாளர்கள் பிற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களைத் தெரிந்து கொண்டு, அதன் பின் முதலீடு செய்தால் அதிக வட்டி வருமானத்தை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

FD திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்:
HDFC பேங்க்: இந்த தனியார் பேங்க், 2 வருடம் 11 மாதங்கள் முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களுக்கு 7.35 % வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாக, அதாவது 7.85% வட்டி வழங்கப்படுகிறது.
பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச வட்டியாக 7.40 % என்பது 4 வருடம் 7 மாதங்கள் முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 4 வருடம் 7 மாதங்கள் முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களுக்கு 7.90% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 2, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
ICICI பேங்க்: ICICI பேங்க் பொது வாடிக்கையாளர்களுக்கு 15 முதல் 18 மாதங்கள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களுக்கு 7.25 சதவீத வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்கள் கூடுதல் 55 அடிப்படை புள்ளிகளுடன் 7.80 சதவீத வட்டியைப் பெற முடியும். இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 2, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB): பஞ்சாப் நேஷனல் பேங்க் 400 நாட்கள் கால அளவு கொண்ட FD திட்டங்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
கோடக் மஹிந்திரா பேங்க்: இந்த தனியார் பேங்க் 390 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கான FD திட்டங்களுக்கு அதிகபட்சமாக 7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதே முதிர்வு காலத்திற்கு மூத்த குடிமக்கள் 7.9 சதவீத வட்டியைப் பெறலாம். சமீபத்திய கட்டணங்கள் ஜூன் 14, 2024 முதல் அமலுக்கு வந்தன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications