சென்னை: சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால், 24 மணி நேரமும் ஃபேன் மற்றும் இதர குளிர்சாதனங்களை ஆன் செய்து வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது போன்ற பருவ கால சவால்களை சமாளிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டம்.
இந்த ஆண்டு ஜனவரியில், பிரதமர் நரேந்திர மோடி, 'பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார். இதன் கீழ் சுமார் 1 கோடி வீடுகளின் கூரையில் சோலார் பேனல்களை நிறுவ மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து தனது அதிகாரபூர்வ X தளத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "அயோத்தியில் இருந்து நான் திரும்பியதும், 10 மில்லியன் வீடுகளின் மேற்கூரையில் சோலார் சிஸ்டம்களை நிறுவ 'பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா' திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்" என்று குறிப்பிட்டிருப்பார். இந்தத் திட்டம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், எரிசக்தித் துறையில் இந்தியாவை நிறைவு அடையச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சோலார் பேனல்கள் நிறுவுவதை பாஜக அரசு ஊக்குவிப்பது இது முதல் முறை அல்ல. 2014 ஆம் ஆண்டில், 2022-ஆம் ஆண்டுக்குள் 40,000 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் நோக்கத்துடன், "Rooftop Solar Programme" என்ற திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்த இலக்கை அடைய முடியவில்லை. இதனால், இந்தத் திட்டத்திற்கான காலக்கெடுவை 2026-ஆம் ஆண்டு வரை நீட்டித்தது. பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா, தற்போது 40 ஜிகாவாட் என்ற இலக்கை அடையும் புதிய முயற்சியாக செயல்பட்டு வருகிறது.
இடைக்கால பட்ஜெட்டில் 'சூர்யோதயா யோஜனா திட்டம்’ பற்றி கூறப்பட்டது என்ன?: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது இடைக்கால பட்ஜெட் உரையின் போது, வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதன் மூலம், ஒரு கோடி குடும்பங்கள் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று பயனடைவார்கள் என்று கூறினார். இந்தத் திட்டத்தின் நன்மைகளை விவரித்த சீதாராமன், இலவச சோலார் மின்சாரம் மூலம் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை மின்சார செலவை சேமிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மே மாத நிலவரப்படி இந்தியாவின் தற்போதைய சூரிய சக்தி எவ்வளவு?: புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, மே 31, 2024 நிலவரப்படி இந்தியாவில் சோலார் பேனல் நிறுவப்பட்டதன் மூலம் கிடைக்கும் எரிசக்தி திறன் சுமார் 84.28 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?: இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ www.solarrooftop.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லலாம். அதன்பின் "அப்ளை ஃபார் ரூஃப் டாப்" என்ற மெனுவை கிளிக் செய்யவும். இப்பொழுது நீங்கள் உங்களது மாநிலம், மாவட்டம், மின்சாரத் விநியோக நிறுவனத்தின் பெயர் மற்றும் நுகர்வோர் எண் ஆகியவற்றை என்டர் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அனைத்து தேவையான விவரங்களையும் கொடுத்து முடித்த பிறகு, நீங்கள் உங்களுக்கான ஒப்புதலைப் பெறுவீர்கள். உங்கள் டிஸ்காமில் பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளரால் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும். செயல்முறை முடிந்ததும், விவரங்களைச் சமர்ப்பித்து, நெட் மீட்டருக்கு விண்ணப்பிக்கவும். அதன் பிறகு 30 நாட்களுக்குள் மானியம் வழங்கப்படும்.
யாரெல்லாம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்?: இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் பயனைப் பெறலாம். மின்சார கட்டணம் அதிகமாக உள்ள வீடுகளுக்கு பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டம் பயனுள்ளதாக இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இந்த திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டத்தின் பலன்கள்:
மின்சார கட்டணம் குறைதல்: வீட்டில் சோலார் பேனல் மின்சார அமைப்பு இருந்தால், மின் கட்டண செலவு குறையும். சூரிய மின்சாரத்தை பயன்படுத்தி மின்சார கட்டணத்தை குறைத்து பணத்தை சேமிக்கலாம்.
மின் தட்டுப்பாடு குறையும்: சொந்தமாக சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதால் மின் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications