ஜெர்மனை சேர்ந்த டெக்னாலஜி மற்றும் சேவை நிறுவனமான போஷ் குழுமம், அதன் பெங்களுரில் தற்போதுள்ள வளாகத்தை முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AIoT) மையமாக மேம்படுத்த 800 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த வளாகத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை போஷ் கொண்டுள்ளதாக அதன் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளது. இது உலகிலேயே இரண்டாவது இடம் இருக்கலாம் என்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சோமித்திரா பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

75 ஏக்கர் வளாகத்தில், இந்தியாவில் உள்ள இந்த குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் தளமாக உள்ளது. குறிப்பாக இதில் வீட்டு உபகரணங்கள், பவர் டூல்கள், பவர் ட்ரெயின்கள் மற்றும் ஆட்டோமோட்டிவ் பிரிவுகள் உள்ளன.
போஷ்ஷின் இந்த நடவடிக்கைக்கு பிறகு 10,000 சாப்ட்வேர் இன்ஜினியர்களை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த விரிவுபடுத்தலானது ஜூன் 202க்குள் முடிவடைந்து தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் இது உலகின் சிறந்த டெக் செண்டர்களில் ஒன்றாக இருக்கும். அதாவது ஐரோப்பா போல இருக்கும். இது இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் போஷ் ஆலையாகும். தற்போது இந்த ஆலையில் 3000 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்ளனர். இந்த விரிவுபடுத்தல் முடிந்தவுடன் இதனை 10,000 பேராக உயர்த்தலாம் என்றும் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
போஷ் கடந்த 1951ல் கர் நாடகவுக்கு வந்தது. 1953 முதல் இந்தியாவிலேயே தயாரிப்பினை செய்து வருகிறோம். ஆக இந்த வளாகம் ஏற்கனவே 68 ஆண்டுகளாக உள்ளது.
போஷ் தற்போது இந்தியாவில் மொத்தம் 31,150 கூட்டாளர்களை கொண்டுள்ளது. இதில் 15 குழு நிறுவனங்கள் மற்றும் 16 உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. உலகளவில் இந்த குழுவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 73,000 பேர் மேம்பாட்டு பொறியாளர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications