ஜெர்மனியை தளமாகக் கொண்ட பன்னாட்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான Bosch, தொழில்துறையில் ஏற்பட்டிருக்கும் சவாலான சூழ்நிலை காரணமாக பெருவாரியான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Bosch பணிநீக்கம் ஜெர்மனியில் உள்ள பல்வேறு ஆலைகளில் பணிபுரியும் 7,000 ஊழியர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Bosch Group ஆனது தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் பிரிவில் உலகளவில் முன்னணியில் உள்ளது மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிரேக் பேடுகள், சென்சார்கள், டிஸ்க்குகள் மற்றும் சேஃப்டி சிஸ்டம்கள் போன்ற வாகன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
Essanews என்ற செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஜெர்மன் தொழில்நுட்ப பெருநிறுவனமான Bosch தனது சமீபத்திய பணிநீக்கத்தின் மூலம் சுமார் 7,000 பேரை பணிநீக்கம் செய்யும் என்று தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ பணிநீக்க அறிவிப்பை Bosch நிறுவனத்தின் CEO-வான ஸ்டீபன் ஹார்டுங் தெரிவித்துள்ளார். அவர் 2024-ஆம் ஆண்டில் நிறுவனம் தனது பொருளாதார இலக்குகளை அடைவதில் சிக்கல் இருப்பதாக முன்கூட்டியே தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு Bosch நிறுவனத்தின் வருவாய் 98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது மற்றும் 5% லாபம் ஈட்டியது, ஆனால் 2024 ஆம் ஆண்டில் 4 சதவீதம் மட்டுமே லாப விகிதம் இருக்கும் என்று ஸ்டீபன் ஹார்டுங் கூறியுள்ளார். பாஷ்-இன் சிஇஓ மேலும் 2025-ஆம் ஆண்டில், நிறுவனம் விற்பனையில் 7% லாபத்தை அடைய இலக்கு வைத்துள்ளது என்றும் கூறினார். அறிக்கையில், பாஷ் சமீபத்திய மாதங்களில் தனது உலகளாவிய பணியாளர்களை குறைக்க தொடர்ந்து அறிவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஷ்-இன் சமீபத்திய பணிநீக்கம் வாகன விநியோகத் துறையை பாதிக்கும் மற்றும் 7,000 பேரை பணிநீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம் மட்டுமின்றி தொடர்ந்து பல முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணி நீக்கங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான செய்தியில் கூட ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்ததை பார்த்தோம். தொழில்துறைக்கு ஒரு மந்தமான சூழ்நிலைதான் தற்போது நிலவி வருகிறது. இதனால் தற்போது இருக்கும் வேலை வாய்ப்பை விட்டு வெளியேறுவது குறித்து பல ஊழியர்களும் யோசித்து முடிவு செய்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications