போஸ் கார்ப்பரேஷனை தொடங்கிய அமர் கோபால் போஸ் தலைசிறந்த தொழிலதிபர், பொறியாளர், கற்றறிந்த அறிவாளி. அவரது சொந்த ஐடியாக்கள், விடாமுயற்சி, ஆடியோ அனுபவத்தில் பல புதுமைகளை செய்தன. போஸ் கார்ப்பரேஷனை உருவாக்கிய அமர் போஸ் ஸ்பீக்கர் சிஸ்டத்தில் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கினார்.
சாதாரண மனிதருக்கு அப்பாற்பட்ட விலை உயர்ந்த ஆடியோ சிஸ்டம்கள் உருவாக காரணமாக இருந்த போஸ் ஆடியோ ஸ்டோர் பார்க் ஸ்ட்ரீட்டில் சக்கை போடு போட்டன. சர்வதேச தரத்திலான ஆடியோ சிஸ்டம் வாங்க வேண்டுமென்றால் அப்போதெல்லாம் சிங்கப்பூர் அல்லது துபாய் மார்க்கெட்டுக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது.

வங்காள விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், சிறந்த அறிவாளியும் தொழிலதிபருமான அமர் கோபால் போஸின் மூளையில் இந்த உலகத் தரம் வாய்ந்த ஆடியோ சிஸ்டம்கள் உருவாகின. உங்களுக்குத் தெரியுமா? அவரது போஸ் கார்ப்பரேஷன் ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ சாதனங்களின் வடிவமைப்பை முழுமையாக மாற்றியது.
அமர் கோபால் போஸ் ஒரு அமெரிக்க தொழிலதிபர், பொறியாளர். அவரது வெற்றிக்குக் காரணம் அயராத உழைப்பு, சிறப்பாகத் திட்டமிடுதல், டாப் நாட்ச் ஆடியோ அனுபவத்தை உருவாக்குதல் ஆகும். அவரது போஸ் கார்ப்பரேஷன் உருவாக்கிய ஸ்பீக்கர்கள் எல்லா கேட்டகிரியிலும் தரம் வாய்ந்த ஸ்பீக்கர்களாக விளங்கின.
அமெரிக்காவின் பிளடெல்பியாவில் 1929 நவம்பர் 2 ஆம் தேதி பிறந்த அமர் போஸ் குடும்பம் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தது. பிரிட்டிஷ் அரசின் கெடுபிடியில் இருந்த தப்புவதற்காக போஸின் தந்தை அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். போஸின் தந்தை நானி கோபால் போஸ் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.
அமர் போஸ் தொடக்கத்தில் இருந்தே பொறியியலிலும் இசையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிஙஅ பட்டம் முடித்தார்.
அதே எம்ஐடியில் டாக்டர் பட்டத்துக்கு படித்தார்.
10 வயது இருக்கும்போது பாய் ஸ்கவுட் பயணத்தை போஸ் மேற்கொண்டார். அவரது நண்பர்கள் அவருக்க ரேடியோ கம்யூனிகேஷன் உபகரணங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினர்.
சில ஆன்டனாக்களை அமைத்து அவர்கள் பேசிக் கொண்டனர்.
1956 ஆம் ஆண்டில் போஸ் வாங்கிய புதிய ஸ்டீரியோ செட்டில் ஏமாந்து போன போஸுக்கு ஆடியோ தொழில்நுட்பம் பற்றிய பொறியை கிளப்பியது. இதைத் தொடர்ந்து அப்போது இருந்த ஸ்பீக்கர் டெக்னாலஜியில் உள்ள குறையைக் களைந்து சவுண்டு தரத்தை கூடுதலாக்கும் வித்தையைக் கற்றுத் தந்தது.
அவர் ஸ்பீக்கர் டிசைன் மற்றும் ஒலியை மக்கள் எப்படி உணர்கின்றனர் என்பதன் பின்னணி பற்றி பல புதிய கோட்பாடுகளை உருவாக்கினார்.
1964 ஆம் ஆண்டில் போஸ் கார்ப்பரேஷனை தொடங்கிய போஸ் முழுவதும் பொருட்கள் மேம்பாடு மற்றும் ஆய்வில் கவனம் செலுத்தினார்.
கம்பெனியின் முதல் பெரிய தயாரிப்பான போஸ் 901 டிரெக்ட் ரிப்ளெக்டிங் ஸ்பீக்கர் சிஸ்டம் 1968 ஆம் ஆண்டு அறிமுகமானது. அந்த சிஸ்டத்தின் தனித்துவமான சவுண்டு ரிபெள்க்ஷன் நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றது.
மரபை மீறும் அமர் போஸின் அணுகுமுறை பெயர் பெற்றது. போஸ் கார்ப்பரேஷன் பங்குச் சந்தையில் ஈடுபட அமர் போஸுக்கு விருப்பமில்லை. தனது நிறுவனத்தை கையில் வைத்துக் கொண்ட போஸ் பல புதுமைகளை துணிந்து எடுத்தார்.
இதைத் தொடர்ந்து நாய்ஸ் கன்சீலிங் ஹெட்போன்கள், வேவ்கைடு ஸ்பீக்கர் டெக்னாலஜி, புதுமையான கார் ஆடியோ சிஸ்டம் என விதவிதமான தயாரிப்புகளை உருவாக்கினார். அவரது நிறுவனம் உயர்தர ஆடியோ தயாரிப்புகளுக்குப் பேர் பெற்றது.
அமர் போஸின் ஆடியோ தொழில்நுட்பம் வெறும் தயாரிப்பு மேம்பாடுடன் நிற்கவில்லை. எம்ஐடியில் பேராசிரியராக 45 ஆண்டுகள் போஸ் பணியாற்றினார். அவரது ஆய்வுகளும் பேடன்ட்களும் ஆடியோ உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
2011 ஆம் ஆண்டில் கம்பெனியின் பெரும்பான்மையான பங்குகளை எம்ஐடிக்கு அளித்தார். இதை வைத்து போஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடிஸ் உருவாக்கப்பட்டது. அமர் போஸின் சாதனை புதுமையான சிந்தனை, தரத்துக்கு விசுவாசத்தை காட்டுவது, உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கிறது.
2013 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியன்று போஸ் காலமானார். ஆனால் விட்டுச் சென்ற தயாரிப்புகள் ஆடியோ துறையில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications