இந்தியப் பங்குச்சந்தை தற்போது அதிகம் லாபம் தரும் இடமாக இருந்தாலும் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அவ்வப்போது சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி சில எச்சரிக்கை விடுத்து வருகிறது. சமீபத்தில் சில SME IPO களில் திட்டமிட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றச் சூழ்ச்சி நடப்பதாகவும், இத்தகைய முதலீட்டில் இருந்து எச்சரிக்கை உடன் இருக்கவும் முதலீட்டாளர்களுக்கு எச்சரித்தது.
ஆனால் ரீடைல் முதலீட்டாளர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அதிக ஆபத்துள்ள முதலீடுகளில் அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவது முதலீட்டாளர்களுக்கும், சந்தை நிபுணர்களுக்கும் பீதியை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் இந்தியப் பங்குச்சந்தையில் தலைப்பு செய்தியாக மாறிய Resourceful Automobile இன் IPO வெற்றிக்குப் பிறகு, தற்போது பாஸ் பேக்கிங் சொல்யூஷன்ஸ் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 3ஆம் தேதி முடிந்தது. இன்று யாருக்கெல்லாம் பங்குகள் கிடைக்கும் என்பது முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் டிவிட்டரில் பாஸ் பேக்கிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் கூகுள் ரிவ்யூவ் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த குட்டி தொழிற்சாலையா 135x IPO சப்ஸ்கிரிப்ஷன் பெற்றது என அதிர்ச்சியூட்டியுள்ளது.

பாஸ் பேக்கிங் சொல்யூஷன்ஸ் என்று SME நிறுவனம் ரூ.8 கோடியைத் திரட்ட ஐபிஓ வெளியீட்டது. இந்நிறுவனம் பேக்கிங், லேபிளிங், தொப்பி மற்றும் நிரப்புதல் ஆகியவற்றிற்கான இயந்திரங்களை வழங்கும் நிறுவனமாகும். இந்த தொழிற்சாலை வெறும் 4500 சதுரடியில், வெறும் 64 பேர் மட்டுமே பணியாற்றுவது தான் வேடிக்கையான விஷயம்.

வெறும் 8 கோடி முதலீட்டைத் திரட்ட வந்த பாஸ் பேக்கிங் சொல்யூஷன்ஸ் ஐபிஓ-வில் சுமார் ரூ.1,073 கோடி மதிப்பிலான சப்ஸ்கிரிப்ஷன்களை பெற்று பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் நிறுவனத்தின் லாபம் கிட்டத்தட்ட ஓரே மாதிரியாக இருந்துள்ளது.

அகமதாபாத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாஸ் பேக்கிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வெறும் 4500 சதுரடி கொண்ட சிறிய தொழிற்சாலை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த கடன் 2023 ஆம் ஆண்டில் 1.64 கோடியிலிருந்து 82 சதவீதம் அதிகரித்து ரூ.3.06 கோடியைத் தொட்டுள்ளது.

இந்த ஆண்டில் குறைந்தது ஐந்து SME IPO-க்களில், 1,000 மடங்கு என்ற அதிர்ச்சியூட்டும் வகையில் சப்ஸ்கிரிப்ஷன்களை பெற்றுள்ளது. இதன் வாயிலாக SME IPO குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் காரசாரமான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
உதாரணமாக, புகழ்பெற்ற முதலீட்டாளர் அஷிஷ் கச்சோலியா, SME தளத்தை ஆதரித்து, கடுமையான ஒழுங்குமுறை அணுகுமுறையை எதிர்த்துப் பேசி வருகிறார். ஆனால் மறுபுறம், பங்குச்சந்தையில் நீண்ட கால அனுபவமிக்க முதலீட்டாளரான விஜய் கேடியா, SME IPO பிரிவில் மிகப்பெரிய அளவில் சூழ்ச்சி நடப்பதாகத் தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications