வாட்டர் பாட்டில் வைத்து முகேஷ் அம்பானி இடத்தை பிடித்தார் ஜாங் ஷான்ஷான்..!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2020ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்கொண்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு தொடர் சொத்து மதிப்பின் வீழ்ச்சியின் காரணமாக முகேஷ் அம்பானி டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ள முகேஷ் அம்பானி 2020ஆம் ஆண்டின் கடைசி நாளில் சீனாவின் ஜாங் ஷான்ஷான் என்பவரால் 12ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.

இது மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானியின் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தையும் ஜாங் ஷான்ஷான் தட்டி சென்று உள்ளார்.

ஜாங் ஷான்ஷான்

ஜாங் ஷான்ஷான்

6ஆம் வகுப்பு மட்டுமே பிடித்த ஜாங் ஷான்ஷான், 12 வயது முதல் கட்டிட வேலை, சேல்ஸ்மேன் எனப் பல சின்ன வேலைகளைச் செய்து தனி ஆளாக வளர்ந்தவர். 1996ல் இவர் துவங்கிய நோங்பூ ஸ்பிரிங் என்ற பாட்டில் தண்ணீர் மற்றும் குளிர்பான நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நிலையான வளர்ச்சி அடைந்து இன்று சீனாவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமாக உயர்ந்துள்ளது.

முக்கிய வர்த்தகம்

முக்கிய வர்த்தகம்

இதோடு ஜாங் ஷான்ஷான் மருந்து துறையிலும் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைக் கொண்ட வான்டாய் என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 2020 கொரோனா காலத்தில் மக்கள் சுகாதாரத்திற்கு அதிகளவிலான முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் ஜாங் ஷான்ஷான் நிறுவனத்தின் பாட்டில் தண்ணீர் வர்த்தகம், மருந்து வர்த்தகமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

ஜாங் தி லோன் உல்ப்

ஜாங் தி லோன் உல்ப்

ஜாங் ஷான்ஷான் எந்த அரசியல் தொடர்பும் இல்லாமல், சீனாவின் மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கும் ரியல் எஸ்டேட், டெக் போன்ற துறைகளில் இல்லாமல் தனித்தொரு துறையில் வர்த்தகத்தைத் துவங்கிச் சாதித்துள்ளார்.

2020ல் சீனாவின் பல டெக் மற்றும் ரியல் எஸ்டேட் பில்லியனர்களைப் பின்னுக்குத்தள்ளி சீனா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார். இதற்காகவே இவரைச் சீனாவில் "Lone Wolf" என அழைக்கப்படுகிறார்.

 

ஐபிஓ வெற்றி

ஐபிஓ வெற்றி

2020க்கு முன்பு ஜாங் ஷான்ஷான் பெரிய அளவில் பிரபலம் இல்லாத நிலையில் இந்தத் திடீர் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஐபிஓ. 2020 ஏப்ரல் மாதத்தில் ஜாங் தனது மருந்து தயாரிப்பு நிறுவனமான வான்டாய் பயோலாஜிக்கல் பார்மஸி நிறுவனத்தைச் சீன பங்குச்சந்தையிலும், நோங்பூ ஸ்பிரிங் நிறுவனத்தை ஹாங்காங் பங்குச்சந்தையிலும் பட்டியலிட்டார்.

பங்கு மதிப்பு உயர்வு

பங்கு மதிப்பு உயர்வு

நோங்பூ ஸ்பிரிங் பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு 155% சதவீதமும், வான்டாய் பயோலாஜிக்கல் பார்மஸி நிறுவனம் சுமார் 2000 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஜாங் ஷான்ஷான் 2020ல் 70.9 பில்லியன் டாலர் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 78.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

முகேஷ் அம்பானி வீழ்ச்சி

முகேஷ் அம்பானி வீழ்ச்சி

இந்த அதிரடி வளர்ச்சியின் காரணமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜாங் ஷான்ஷான் 11வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜாங் வளர்ச்சியினாலும் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு சரிவினாலும் 11வது இடத்தை இழந்தார் முகேஷ்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+