உலகம் முழுக்க பிரபலமான இந்திய சினிமா துறையானது தென்னிந்திய சினிமாவுக்கு, இந்த ஆண்டு ஜாக்பாட் என்றே கூறலாம். ஏனெனில் பல மொழி சார்ந்த படங்கள் கோடிக் கணக்கில் வசூலை வாரி குவித்து வருகின்றன.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் அடிப்படையில் பல ஹிந்தி படங்கள் தோல்வியடைந்ததால், கடினமான ஒரு ஆண்டாக நடப்பு ஆண்டு இருந்தது எனலாம். ஹிந்தி ஸ்டார்களான அமீர் கான், ரன்வீர் சிங், ஆயுஷ்கான் குரானா, அக்ஷய் குமார் போன்ற நட்சத்திரங்களால், ரசிகர்களை திரையரங்களுக்கு வரவைக்க முடியவில்லை.
டாப் 10 கலெக்ஷன்
Ormaxe Media தரவின் படி, ஜனவரி - நவம்பர் 2022ல் மொத்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் 9751 கோடி ரூபாய் ஆகும். 2022ம் ஆண்டில் முதல் 10 இடங்களை பிடித்த படங்களில் முதல் இடம் பிடித்த பாலிவுட் படம் பிரம்மாஸ்திரா முதல் பாகமாகும். இது 257.44 கோடி ரூபாய் வசூலை பதிவு செய்துள்ளது.
அதனை தொடர்ந்து தி காஷ்மீர் பைல்ஸ் - 252.90 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.
அஜய் தேவ்கன் நடித்த த்ரிஷ்யம் 227.94 கோடி ரூபாயும், கார்த்திக் ஆர்யன் நடித்த பூல் புலையா 2, 185.90 கோடி ரூபாயும், ஆலியா பட் நடித்த கங்குபாட் கதியவாடி 129.10 கோடி ரூபாயும் வசூலை ஈட்டியுள்ளது.
முதல் இரண்டு படங்கள்
முதல் இரண்டு இடங்களை பிடித்த பிராந்திய திரைபடங்களான கேஜிஎஃப், 434.70 கோடி வசூலையும், ஆர் ஆர் ஆர் படம் 274.34 கோடி ரூபாய் வசூலை ஈட்டி முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள்
கேஜிஎஃப் படம் 2100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மெகா ஹிட் படமாகும். இதே ஆர்ஆர்ஆர் படம் 600 கோடி ரூபாய் செலவில் உருவானது. பொன்னியின் செல்வன் 500 கோடி ரூபாயில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம்.
விக்ரம்- உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படம் 150 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. இதே புஷ்பா- பான் இந்தியா படமாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படமும் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
விஜய் படத்திற்கு முதலீடு
மாஸ்டர்- தளபதி நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான இந்தப் படம் 135 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. இதே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் 180 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது.
பீஸ்ட்- விஜயின் இந்த படம் 150 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை அஜீத்குமாரின் வலிமை படம் 150 கோடி செலவில் படமாக்கப்பட்டது.
எதற்கும் துணிந்தவன்- நடிகர் சூர்யாவின் இந்தப் படம் வெறும் 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. இந்த படம் பெரும் வசூலை ஈட்டியது.


Click it and Unblock the Notifications