இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் துவங்கப்பட்ட போது யார் இதை நம்பி பொருட்களை வாங்க போகிறார்கள் என்கிற கேள்வியும் விவாதமும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் இருந்தது. ஆனால் ஆன்லைன் வர்த்தகம் அல்லது ஈகாமர்ஸ் துறையைப் பார்த்து வியந்துபோய் நிற்கிறது இந்தியா. இதுமட்டும் அல்லாமல் நாட்டின் சில்லறை வியாபாரிகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சியோமி மற்றும் சாம்சங் ஆகியவற்றுக்கு இந்திய வியாபாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்ன பிரச்சனை..?
கடுமையான போட்டி
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது குறிப்பாக நம் நாட்டில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள். சீன நிறுவனங்களுக்கு மத்தியில் ஒருபக்கம் போட்டி இருந்தாலும் மறுபுறம் அமெரிக்க மற்றும் கொரிய நிறுவனங்கள் பெரிய அளவிலான போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வர்த்தகத்தை அடைய வேண்டுமென்றாலோ அல்லது அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும் என்றாலோ விலை தான் மிகப்பெரிய ஆயுதமாக விளங்குகிறது.
20,000 விற்பனையாளர்கள்
இந்நிலையில் வர்த்தகத்திற்காகச் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் அதிகளவிலான தள்ளுபடியை அளித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
இதைக் கடுமையாக எதிர்த்து சுமார் 20,000 வியாபாரிகள் அதீத தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள் இனியும் விற்பனை செய்தால் சியோமி மற்றும் சாம்சங் நிறுவன தயாரிப்புகளை நாங்கள் இனி விற்பனை செய்ய மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.
பாதிப்பு
தயாரிப்பாளர்கள் நேரடியாக இணையத் தளத்தில் அதிகளவிலான தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நிலையில் விற்பனையாளர்களும் அதே விலைக்கு விற்பனை செய்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. சொல்லப்போனால் கடைகளில் இருக்கும் விலையை இணையத்தள விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாடிக்கையாளர்கள் வாங்காமல் செல்கின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என அனைத்து இந்திய மொபைல் விற்பனையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
விற்பனை தடை
இந்தப் பிரச்சனை நீண்ட காலமாக இருக்கும் நிலையில், இந்த முறை ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பிரச்சனையைச் சரி செய்யவில்லை எனில் விற்பனையாளராகிய நாங்கள் தத்தம் நிறுவனங்களின் பொருட்களை விற்பனை தடை செய்யத் தயங்க மாட்டோம். சமீபத்தில் அதீத தள்ளுபடியால் எங்களது வர்த்தகம் பெரிய அளவில் பாதிப்பு அடைந்து வருகிறது.
இதற்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விற்பனையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications