வெறும் வார்த்தை தான்.. #BoycottcChineseProducts.. விற்பனை அமோகமாம்.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில தினங்களாக இந்தியா சீனா இடையேயான பதற்றாமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் 6ம் தேதியன்று நடந்த பேச்சு வார்த்தையை ஒட்டி, இரு தரப்பு ராணுவங்களும் மோதல் ஏற்படும் பகுதிகளில் இருந்து பின்வாங்கியதாக இந்திய ராணுவத் தளபதி கூறியிருந்த நிலையில், தீடிரென ஏற்பட்ட இந்த மோதலில் வீரர்கள் உயிரிழந்திருப்பது சற்று பதற்றமான நிலையை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில் இந்த பிரச்சனை இன்னும் தொடருமோ? இனி சூழ்நிலை எப்படி இருக்கும்? இந்த மோதல்கள் இனி என்னவாகும்? பெருசாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சீன பொருட்கள் வேண்டாம்

சீன பொருட்கள் வேண்டாம்

இது ஒரு புறம் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் சீனா பொருட்கள் வேண்டாம் என்ற குரல்கள் உயரத் தொடங்கியுள்ளன. ஏன் அகில இந்திய வணிகர்கள் சங்கமே இதனை வாய் திறந்து கூறியுள்ளது. 500 சீன பொருட்களை இனி வேண்டாம் என்று. தற்போது சமூக வலைதளங்களிலும் #BoycottcChineseProducts என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

விற்பனையில் பாதிப்பில்லை

விற்பனையில் பாதிப்பில்லை

ஆனால் இவ்வாறு பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் "சீன பொருட்கள் வேண்டாம்" என்ற பரப்புரையால், சீன பொருட்களின் விற்பனை ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்கிறது ஒரு அறிக்கை. நாட்டின் முன்னணி சீன பிராண்டுகளின் தரப்பு நிர்வாகிகள், சீனா ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளதாக மணிகன்ட்ரோல் செய்திகள் கூறுகின்றன.

விற்பனை வழக்கம் போல் உள்ளது

விற்பனை வழக்கம் போல் உள்ளது

அது மட்டும் அல்ல சில்லறை விற்பனையிலோ அல்லது இணைய வழி விற்பனையிலோ எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் #BoycottcChineseProducts என்ற ஹேஷ்டேக், நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. ஆனால் மறுபுறம் வணிகம் வழக்கம் போல் இருப்பதாக தி எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவுட் ஆப் ஸ்டாக்

அவுட் ஆப் ஸ்டாக்

குறிப்பாக சீனாவின் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையில் எந்தவிதமான சரிவும் இல்லை என்று முன்னணி வணிக தளத்தின் மூத்த நிர்வாகி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக சீனாவின் ஜியோமி நிறுவனம் ஜூன் 17 அன்று அறிமுகப்படுத்திய லேப்டாப்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதும், அவை ஸ்டாக் தீரும் அளவுக்கு விற்பனை நடந்துள்ளதையும் குறிப்பிட்டு காட்டியுள்ளது இந்த அறிக்கை.

தேவை அதிகமாக உள்ளது

தேவை அதிகமாக உள்ளது

மேலும் இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் நல்ல தேவை உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் லாக்டவுன் தளர்வுக்கு பிறகு படிப்படியாக விற்பனை அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் அறிமுகப்படுத்திய பொருட்கள் நுகர்வோரிடம் இருந்து சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் இடியிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எந்த மாற்றமும் இல்லை

எந்த மாற்றமும் இல்லை

இது மட்டும் அல்ல, மற்ற பிராண்டுகளும் அமேசான் மற்றும் பிளிப்கார்டில் பிளாஷ் விற்பனையுடன் அதிகரித்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இது குறித்து மற்றொரு ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, ஜூன் 16 அன்று 30,000 கடை நிர்வாகிகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதன் படி அவர்கள் கொள்முதல் மற்றும் நுகர்வோர் உணர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏசி

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏசி

அமெரிக்கா சீனாவின் கூட்டு நிறுவனமான ஏசி பிராண்ட் Midea India, இந்தியாவில் தேவை குறையவில்லை. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஷன் சச்ஸ்தேவ் இது ஒரு வெளிநாட்டு பிராண்டாக இருந்தாலும், அனைத்து தயாரிப்புகளும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சீனா பிராண்டுகள் ஆக்கிரமிப்பு

சீனா பிராண்டுகள் ஆக்கிரமிப்பு

இது குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்தினை கூறுகையில், இந்தியாவில் சீன பிராண்டுகள் கொண்டுள்ள சந்தை பங்கினைப் பொறுத்த வரையில், நுகர்வோருக்கு வேறு வழியில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக கவுண்டர்பாய்ன்ட் அறிக்கைகள், இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் 81% கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

வேறு ஆப்சன் அதிகம் இல்லை

வேறு ஆப்சன் அதிகம் இல்லை

ஏனெனில் இந்திய பயனர்களுக்கு அதிக தேர்வு இல்லை. இந்திய பிராண்டுகள் 1% பங்கினைக் மட்டுமே கொண்டுள்ளன. அதே நேரம் சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்கள் மட்டுமே சீனா ஸ்மார்ட்போன்களளுக்கும், சீன சந்தைக்கும் மாற்றாக உள்ளன என்றும் கவுன்டர்பாயின்ட் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் கவலைப்பட மாட்டார்கள்

நுகர்வோர் கவலைப்பட மாட்டார்கள்

ஐடிசி இந்தியாவின் ஆராய்ச்சி இயக்குனர் நவ்கேந்தார் சிங் விற்பனை தொடரும் வரையில், நுகர்வோர் பாகுபாடு காட்டமாட்டார்கள். நுகர்வோரிடம் அதிகம் செலவழிக்க பணம் இல்லை. ஆக அவர்கள் இந்த விஷயங்களைப் பற்றி கவலைப்பட போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது நிதர்சனமான உண்மை

இது நிதர்சனமான உண்மை

நாம் என்ன தான் சீனா பொருட்கள் வேண்டாம் என்று கூறினாலும், இன்று நம்மில் பலரிடம் உள்ள ஸ்மார்ட்போன்களில் பல சீன பிராண்டுகள் தான். ஆக சீனா சந்தையினை நம்மிடம் இருந்து விலக்கம் தற்போது நம்மிடம் போதிய உற்பத்தியோ, தொழில் நுட்பமோ கிடையாது. ஒரு வேளை அப்படியே மாறினாலும், முற்றிலும் சீனாவினை தவிர்க்க முடியாது. ஏனெனில் இன்று நாம் வீட்டில் பயன்படுத்தும் கொசு அடிக்கும் பேட் முதல் ஆட்டோ மொபைல் உற்பத்தி வரை, சீனாவின் பங்கு கணிசமாக உள்ளது. ஆக சீனா பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது கஷ்டமான விஷயமே.. இது நிதர்சனமான உண்மையும் கூட.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

#BoycottcChineseProducts? china Brands says no impact on sales/

Some experts say Chinese brands enjoy in india, because customers have no choice.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X