boycottchina: சீன பொருட்களை புறக்கணியுங்கள்.. அர்விந்த் கெஜ்ரிவால் பளீர் கருத்து..!

டெல்லி: விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் இந்திய பொருட்களையே வாங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்தியா சீன இடையே எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், கெஜ்ரிவாலின் இந்த கருத்தானது வந்துள்ளது.

சீனால் எல்லையில் தாக்குதலை நடந்தி வரும் நிலையில், அந்நாட்டிலிருந்து அதிக அளவு இறக்குமதிகளை ஏன் மத்திய அரச அனுமதிக்கிறது. இதன் மூலம் மோடி சீனாவுக்கு வெகுமதி வழங்குகிறது குற்றம் சாட்டியுள்ளார்;

மக்கள் தயாராக இருக்கணும்

மக்கள் தயாராக இருக்கணும்

இந்தியா இறக்குமதியை நிறுத்தினால் சீனாவுக்கு அதன் மதிப்பு தெரிய வரும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தைரியமாக செயல்பட வேண்டும். சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீனப் பொருட்கள் விலை குறைந்தாலும் எங்களுக்கு வேண்டாம், அதிக விலை கொடுத்தாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

தொடர்ந்து பல கட்ட பேச்சு வார்த்தை என்பது இருதரப்பிலும் நடந்து வந்தாலும், சீனா திருந்துவதாக இல்லை. தொடர்ந்து எல்லையில் புகைச்சலாகவே இருந்து வருகின்றது. கடந்த 2020லேயே பல இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்தசமத்திலேயே boycottchina $boycottchinaproducts என வரிசையாக விமர்சனங்கள் எழுந்தன. எனினும் அது வணிக ரீதியாக பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.

சீனாவினை நம்பியிருப்பதை குறைக்கலாம்

சீனாவினை நம்பியிருப்பதை குறைக்கலாம்

எனினும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு அதன் அறிக்கை ஒன்றில், சீன இறக்குமதியினை இந்தியா நம்பியிருக்கும் நிலையில், அதனை புறக்கணிப்பது கடினம். ஆனால் சீனாவினையே முழுக்க சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது நினைவுகூறக்தக்கது. ஆக முழுமையான சீனாவினையே சார்ந்திருந்தால், படிப்படியாக குறைத்துக் கொள்ளவதும், மேட் இன் இந்தியாவை விரிவாக்கம் செய்வதுமே இதற்கு பலன் தரும்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி?

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி?

சீனா தனது புள்ளி விவரங்களின் 2021 - 2022 இந்தியா தனது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருப்பதாக கூறியது. எனினும் நடப்பு ஆண்டில் அங்கு கொரோனவின் தாக்கம் என்பது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகின்றது. இது மேற்கொண்டு தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என தெரிகிறது. எது எப்படியோ இந்தியா சீனா இடையேயான வணிகம் என்பது அதனால் பாதிக்கப்படலாம் என்றாலும், சீனா வேண்டாம் என்ற புறக்கணிப்பானது புறக்கணிக்கப்படாமல் இருந்தால் சரி தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+