இந்தியாவில் தற்போது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க துவங்கியுள்ள நிலையிலும், மக்கள் மத்தியில் எல்கட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வாமாக இருக்கும் போது இத்துறை வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாமல் இருக்க மிக முக்கியமான காரணம் இதற்கான கட்டமைப்பு இல்லாமல் இருப்பது தான்.
இந்த நிலையில் மாற்ற களத்தில் இறங்கியுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் பெட்ரோல் விற்பனை நிறுவனமான பார்த் பெட்ரோலியம்.
பாரத் பெட்ரோலியம்
பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் இன்று பெங்களூர் - சென்னை மற்றும் பெங்களூர் - மைசூர் - கூர்க் நெடுஞ்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தற்போது வாகனங்களும் சரி, சார்ஜிங் ஸ்டேஷனும் சரி பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டு வருகிறது.
7000 பங்க்
இதை தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் இந்தியாவில் அதிகரித்து வரும் எலக்ட்ரிக் வாகன விற்பனையை கருத்தில் கொண்டு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் சுமார் 7000 பங்க்-களை எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷனாக மாற்ற உள்ளது. இது பர்சனல் மொபிலிட்டி-யில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய உள்ளது.
9 சார்ஜிங் ஸ்டேஷன்
மேலும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் 100 கிலோ மீட்டர் சாலையின் 2 பக்கத்தில் சுமார் 9 ஸ்டேஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் பயன்படுத்துபவர்கள் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
BYD நிறுவனம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்குள் சீனாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான BYD தற்போது ரீடைல் விற்பனையில் இறங்கியுள்ளது. BYD நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான e6-ஐ ரீடைல் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதோடு புதிதாக ஒரு ப்ரீமியம் எஸ்யூவி மாடல் BYD-ATTO 3 காரையும் இன்று அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications