Dubai-ல் கொடிக்கட்டி பறந்த BR Shetty! வெறும் 1 டாலருக்கு ரூ.12,478 கோடி சாம்ராஜ்ஜியதையும் இழந்தார்!

தளபதி விஜய் படத்தில் வரும் டயலாக் போல் வாழ்க்கை ஒரு சக்கரம் மாதிரி, கீழ இருக்குறவேன் மேலே போவான், மேல இருக்கிறன் கீழ வருவான் என்பதற்கு சரியான உதாரணம் முன்னாள் கோடீஸ்வர தொழிலதிபர் பிஆர் ஷெட்டி தான்.

பிஆர் ஷெட்டி இந்த பெயர் பலரும் கேள்விப்பட்டு இருக்க கூடும், சிலருக்கு இவர் யார் என்று நினைவிருக்கும், ஆனால் பலருக்கு இவரின் கதை மறந்திருப்பார்கள். பிஆர் ஷெட்டி வாழ்க்கை வியப்புளிக்கும் வகையில் எழுச்சியும் அதிர்ச்சியூட்டும் வகையில் வீழ்ச்சி அடைந்த கதை கடந்த 10 வருட கார்ப்பரேட் உலகின் முக்கியமான ஒன்று.

Dubai-ல் கொடிக்கட்டி பறந்த BR Shetty! வெறும் 1 டாலருக்கு ரூ.12,478 கோடி சாம்ராஜ்ஜியதையும் இழந்தார்!

இன்று எப்படி கௌதம் அதானி ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை மூலம் படாதாபாடு பட்டுவருகிராறோ, இதேபோல் பிஆர் ஷெட்டி சாம்ராஜ்ஜியத்தை புரட்டிப்போட்டதும் ஒரு ஷாட் செல்லர் தான்.

பிஆர் ஷெட்டி ஏறக்குறைய எதுவுமே இல்லாமல் தனது வாழ்க்கையை தொடங்கி, கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி மூலம் வெற்றியின் உச்சத்தை அடைந்தார். பிஆர் ஷெட்டி சொத்து மதிப்பு அதிகப்படியான ஒருமுறை ரூ.18000 கோடிக்கு மேல் இருந்தது.

பிஆர் ஷெட்டி துபாயில் ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் உயரமான மாடி வீடுகளை வைத்திருந்தார், இதுமட்டும் அல்லாமல் பிரைவேட் ஜெட் விமானத்தில் தொடர்ந்து பறந்து தனது பிஸ்னஸ் சாம்ராஜ்ஜியத்தை வளர்த்தார். மேலும் இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மேபேக் போன்ற பல சொகுசு கார்கள் இருந்தது.

ஆனால் ஒரு காலத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிஆர் ஷெட்டி-யின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் வெறும் 1 டாலருக்கு அப்போது ரூ.74 விற்க வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? யார் இந்த பிஆர் ஷெட்டி..?

பவகுது ரகுராம் ஷெட்டி கையில் வெறும் $8 சேமிப்புடன் கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் இருந்து வாய்ப்புகளைத் தேடி வளைகுடா நாட்டிற்கு சென்றார். வெறும் வேலைவாய்ப்புகளை தேடி வந்த பிஆர் ஷெட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய தனியார் ஹெல்த் நிறுவனமான என்எம்சி ஹெல்த் நிறுவனத்தை உருவாக்கினார்.

இந்த ஒரு நிறுவனத்தின் மூலம் உலகின் பணக்கார பில்லியனர்களின் பட்டியலில் சேர்ந்தார் பிஆர் ஷெட்டி. இந்த நிலையில் தான் பிரிட்டன் நாட்டை சேர்ந்த கார்சன் பிளாக் என்ற ஷாட் செல்லர் இயக்கப்படும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான மடி வாட்டர்ஸின் ஒற்றை ட்வீட் மூலம் 2019ல் பெரும் சிக்கலில் மாடிட்டிக்கொண்டார்.

இந்த ஒரு டிவீட்-ஐ தொடர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, மட்டி வாட்டர்ஸ் NMC ஹெல்த் செய்த நிதி முறைகேடுகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. இதன் பின்பு பிஆர் ஷெட்டி $2 பில்லியன் சந்தை மதிப்பைக் கொண்டிருந்த தனது நிதி நிறுவனமான Finablr Plc ஒரு இஸ்ரேலிய-யுஏஇ கூட்டமைப்பிற்கு வெறும் 1 டாலருக்கு விற்க நேர்ந்தது.

NMC ஹெல்த் நிறுவனம் தனது நிதி நிலுவைகளை உயர்த்தி அதன் கடனைக் குறைத்துக் காட்டியதாகக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு Finablr வாரியத்திடம் இருந்து சுமார் $1 பில்லியன் கடன் மறைக்கப்பட்டது தெரியவந்தது. இது நிதி மோசடி அளவுக்கு பேசப்பட்ட நிலையில் பிஆர் ஷெட்டி பிரச்சனையில் இருந்து தப்பித்தால் போதுமென வெறும் 1 டாலருக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்ய

பிஆர் ஷெட்டி-யின் உச்ச காலக்கட்டத்தில் துபாயின் உயரமான கட்டிமாக விளங்கும் புர்ஜ் கலீஃபாவில் இரண்டு முழு தளங்களையும் அவர் சொந்தமாக வைத்திருந்தார். பிஆர் ஷெட்டி இதை சுமார் 25 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி ஆடம்பர விருந்துகளை வழங்கவும், விழாவை நடத்தவும் அவற்றைப் பயன்படுத்தினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதுமட்டுமா துபாயின் சர்வதேச வர்த்தக மையம் மற்றும் பாம் ஜுமேரா ஆகியவற்றிலும் அவருக்கு சொத்துக்கள் இருந்தன. பிஆர் ஷெட்டி-க்கு வேகமாக செல்லும் கார்களும் மற்றும் பழங்கால வாகனங்களை அதிகம் விரும்புபவர்.

இவரிடம் பல கோடி மதிப்புள்ள கேரேஜில் மோரிஸ் மைனர் 1000, சில்வர் ஸ்பிரிட் மற்றும் பாண்டம் உள்ளிட்ட ஏழு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பரத்தின் இறுதி அடையாளமான மெர்சிடிஸ்-மேபேக் எம்600 ஆகியவை இவருடைய கார் கலெக்ஷனில் அடங்கும்.

2014 இல் சக வளைகுடா பில்லியனரிடமிருந்து சுமார் 4.2 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தின் 50% உரிமையையும் அவர் வைத்திருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+