இந்தியா நீண்ட காலமாக ஆயுத இறக்குமதி நாடாக மட்டுமே இருந்து வருகிறது, அதிலும் குறிப்பாக இந்தியா ரஷ்யாவிடம் அதிகப்படியான ஆயுதங்களை வாங்குகிறது. இந்தியா - ரஷ்யா மத்தியில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தங்கள் நிலுவையில் இருக்கும் வேளையில் ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் ஆயுதங்கள், முக்கிய உபகரணங்களின் டெலிவரி தாமதமாகி வருகிறது.
இன்றும் இந்தியா தனக்கு தேவையான ஆயுதங்களை அதிகப்படியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், ஆயுத வர்த்தகத்தில் இறக்குமதி மட்டுமே செய்து வந்த இந்தியா தற்போது ஏற்றுமதி செய்யவும் துவங்கியுள்ளது உங்களுக்கு தெரியுமா..? இது மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் ஆயுத ஏற்றுமதியில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் பட்டியலிலும் இந்தியா இடம்பிடித்துள்ளது.

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியிலும், உற்பத்தியிலும் முக்கிய அங்கமாக உள்ளது BrahMos ஏவுகணை. 1998 ஆம் ஆண்டு இந்தியா - ரஷ்யா அரசு மத்தியிலான கூட்டணியில் உருவாக்கப்பட்ட BrahMos Aerospace நிறுவனம் தான் BrahMos ஏவுகணையை உருவாக்குகிறது. இந்நிறவனம் இந்திய அரசின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyenia கூட்டணியில் உருவானது.
BrahMos ஏவுகணை-யின் முதல் சோதனை 2001ல் செய்யப்பட்டு, அடுத்த சில வருடத்தில் இந்திய கப்பல் படை, விமான படை, ராணுவத்தில் நியமிக்கப்பட்டது. உக்ரைன் மீதான போரின் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை மூலம் BrahMos ஏவுகணை-யின் உற்பத்தி, டிசைன், திட்டமிடல் என எதிலும் பாதிப்பு இருக்காது.
BrahMos ஏவுகணை தயாரிப்பின் ஆரம்பக்கட்டத்தில் வெறும் 15 சதவீத உதிரிபாகங்கள் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, தற்போது இது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. 30 சதவீத பொருட்களுக்கு ரஷ்யா-வை நம்பியிருந்தாலும், இது சமாளிக்க கூடிய வகையில் தான் உள்ளது. இதேவேளையில் BrahMos ஏவுகணையை BrahMos Aerospace நிறுவனம் பல வகையில் மேம்படுத்தி மிகவும் திறனுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றி வருகிறது.
இந்த நிலையில் தான் BrahMos ஏவுகணையை கண்டு வியந்து வாங்க முன் வந்துள்ளது. கடந்த வருடம் பிலிப்பைன்ஸ் நாடு இந்திய அரசுடன் 375 மில்லியன் டாலர் மதிப்பிலான BrahMos ஏவுகணை-ஐ வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதை தொடர்ந்து இந்தோனேஷியா-வுக்கு 200 மில்லியன் டாலருக்கும், தறப்போது வியட்நாம் அரசு 625 மில்லியன் டாலர் மதிப்பிலான BrahMos ஏவுகணையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. அடுத்தடுத்து 3 நாட்கள் உடனான ஆயுத ஒப்பந்தம் பெரும் நம்பிக்கையை இந்திய பாதுகாப்பு துறையில் ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் 2016-17ல் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி வெறும் 1,521 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022-23 ஆம் நிதியாண்டில் 15,920 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி 35000 கோடி ரூபாய் அளவீட்டை தொடும் நிலையில் உள்ளது.
More From GoodReturns

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications