இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மறக்க மற்றும் தவிர்க்க முடியாத பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1943ல் அவர் கிழக்கு ஆசியாவில் சுதந்திர இயக்கத்தை வழிநடத்த ஜெர்மனி வழியாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானை அடைந்தார்.
அப்போது அந்நாட்டில் வளர்ந்த 15 வயதான ஒரு ஒல்லியான இளம்பெண், நேதாஜியிடம் இந்தியாவின் சுதந்திரத்திற்கான உங்களது போராட்டத்துக்கு உதவுவதாக தெரிவித்தார். உடனே நேதாஜி, அந்த இளம் பெண்ணிடம், நீ படையில் சேர முடியாத அளவுக்கு இளமையாக இருக்கிறார் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இருப்பினும் சில ஆண்டுகள் கழித்து அந்த பெண் மீண்டும் நேதாஜியை சந்தித்து தன்னை படையில் சேர அனுமதிக்கும்படி கோரினார். அந்த பெண்ணின் உறுதியால் ஈர்க்கப்பட்ட நேதாஜி, ஜப்பானியர்களின் உதவியுடன் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றும் நோகத்துடன் புதிதாக உருவாக்கப்பட்ட பெண்கள் படைப்பிரிவில் சேர்த்துக் கொண்டார்.
கடுமையான பயிற்சிக்கு பிறகு இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணியின் லெப்டினன்ட் ஆனார். அந்த பெண்ணின் பெயர் பாரதி ஆஷா சஹய் சவுத்ரி. இப்போது 95 வயதான ஆஷா சான் பீகாரில் உள்ள பாட்னாவில் வசிக்கிறார்.
இவரது வாழ்க்கை அனுபவங்கள் குறித்த வரலாறு 1992ல் இந்தியில் புத்தமாக வெளிவந்தது. தற்போது அவரது பேத்தி தன்வி ஸ்ரீவஸ்தவா முதல் முறையாக அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தின்படி, 1928ல் ஜப்பானின் கோபியில் சுதந்திர போராட்ட வீரர்களான சதி சென் மற்றும் ஆனந்த் மோகன் சஹாப் ஆகியோருக்கு மகளாக பாரதி ஆஷா சஹய் சவுத்ரி பிறந்தார்.
பெற்றோர்கள் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தபோது, ஆஷா தனது பள்ளிப்படிப்பை டோக்கியாவில் உள்ள ஷோவர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். அவர் தனது 17 வயதில் ராணி ஜான்சி படைப்பிரிவில் சேர்ந்த பிறகு தனது படிப்பை நிறுத்தினார். பாங்காங்கில் பயிற்சி முகாமுக்கு சென்றார்.
ஜப்பானிய மொழி பேசி வளர்ந்தவர் என்பதால் அவருக்கு மொழி ஒரு தடையாக இருந்தது. இருப்பினும் அவர் படைப்பிரிவில் நண்பர்களை உருவாக்கி கொண்டார். பயிற்சி முடிந்தவுடனேயே ஆஷா தனது படைப்பிரிவுடன் சேர்ந்து 1945ல் பாங்காக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ள பர்மாவுக்கு (இன்றைய மியான்மர்) நடந்து சென்றார்.
மியான்மரின் மிகப்பெரிய நதி மற்றும் முக்கியமான வணிக நீர்வழிப் பாதையான ஐராவது ஆற்றின் கரையை பெண்கள் படைப்பிரிவு சென்றடைந்தது. ஆறு வெள்ளத்தில் மூழ்கியதால் அவர்களால் மறுகரையில் உள்ள பெரிய இந்திய தேசிய ராணுவத்தில் சேர முடியாமல் போனது.
எனவே படைப்பிரிவு தங்கள் முகாம்களை கரையில் அமைத்தது. இருப்பினும் அவர்கள் ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டனர் மற்றும் ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பாங்காக்கிற்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்ற பெண்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். ஆனால் ஆஷாவால் எங்கும் செல்ல முடியவில்லை. அவரது தந்தை சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளையில் ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தன.
1945 ஆகஸ்டில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணு குண்டுகள் வீசப்பட்டன. ஜப்பானிய படைகள் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1945 ஆகஸ்ட் 18ம் தேதியன்று டோக்கியாவுக்கு சென்று கொண்டிருந்த நேதாஜி பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது.
இது இந்திய தேசிய ராணுவத்தின் தோல்வியாக அமைந்தது. ஒரு ஆண்டு கழித்து ஆஷாவும் அவரது தந்தையும் இந்தியாவிற்கு வந்தனர். 1947ல் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் சதந்திரம் பெற்ற போது தாய் சட்டி சென் உடன் மீண்டும் இணைந்தனர். இந்தியாவில் ஆஷா தனது கல்வியை தொடர்ந்தார். 1949ல் திருமணம் செய்து கொண்டார். அவர் தன்னார்வ பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications