இந்தியாவில் உயர் பதவிகளில் இருப்பவர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கான சலுகைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் முதல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை வாங்கும் சம்பளம் குறித்த தகவலை இங்கு பார்க்கலாம். நேற்று முன்தினம் துணை ஜனாதிபதி ஜெகன்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதையும் பார்க்கலாம்.
குடியரசுத் தலைவர் : இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படுகிறார். இவரின் மாத சம்பளம் 2018இல் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், அவருக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஜனாதிபதி வசிக்கும் ராஷ்டிரபதி பவன், 340 அறைகள் கொண்ட மிகப் பெரிய மற்றும் ஆடம்பர இல்லமாகும். இதற்கான மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், மருத்துவ செலவுகள், பயண செல்வுகள் ஆகியவை அரசாங்கமே வழங்குகிறது.

மேலும், ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும். மேலும், ஒரு வாடகையில்லா பங்களா, இரண்டு இலவச தொலைபேசி இணைப்புகள், 5 தனிப்பட்ட ஊழியர்களின் செலவுக்காக ஆண்டுக்கு ரூ.60,000 வழங்கப்படுகிறது.
துணை குடியரசுத் தலைவர் : இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாத சம்பளம் ரூ.4 லட்சம் ஆகும். இந்த சம்பளம், துணை குடியரசுத் தலைவர் பதவிக்கானது அல்ல. அவரின் ராஜ்யசபா தலைவர் பதவிக்கு வழங்கப்படும் சம்பளம் ஆகும். மேலும் இவருக்கு இலவச வீடு, மருத்துவ சேவைகள், ரயில் - விமானத்தில் இலவச பயணம், லேண்ட்லைன் மற்றும் மொபைல் போன் வசதிகள், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சில தனியார் ஊழியர்கள் வழங்கப்படும். ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு மாதம் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்படும். துணை குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவரின் பதவியை வகிக்கும் பட்சத்தில் அதற்கான சம்பளம் மற்றும் சலுகையும் வழங்கப்படுகிறது.
பிரதமர் சம்பளம் : இந்திய பிரதமரின் மாத சம்பளம் ரூ.1.66 லட்சம் ஆகும். இதில் ரூ.50,000 அடிப்படை சம்பளம், ரூ.3,000 செலவுத் தொகை, ரூ.45,000 தொகுதி அலவன்ஸ் மற்றும் ரூ.45,000 அலுவலக செலவு அலவன்ஸ் உள்ளிட்டவையும் அடங்கும். அவருக்கு இல்லமும் இலவசமாக வழங்கப்படுகிறது. பிரதமரின் அவரின் பாதுகாப்புக்காக சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) நியமிக்கப்படுகிறது. அதேபோல், பிரதமரின் அரசுப் பயணங்களுக்கு 'ஏர் இந்தியா ஒன்' என்ற தனிப்பட்ட விமானம் பயன்படுத்தப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. அதனுடன் பல்வேறு சலுகைகளும், அலவன்ஸ்களும் வழங்கப்படுகின்றன. நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, அவர்களுக்கு தினசரி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. கூடுதலாக, மாதந்தோறும் ரூ.45,000 தொகுதி அலவன்ஸ் மற்றும் ரூ.45,000 அலுவலக செலவுத் தொகையும் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. பயணம் சாலை வழியாக இருக்கும் பட்சத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.16 வழங்கப்படுகிறது. மேலும், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையும் கிடைக்கிறது. எம்.பி சம்பளம் மற்றும் சலுகைகள், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்.

பதவிகள் மற்றும் மாத சம்பளம் : மாநில ஆளுநர்கள் - ரூ.3.5 லட்சம் + அலவன்ஸ்கள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - ரூ.2.8 லட்சம்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் - ரூ.2.5 லட்சம்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் - ரூ.2.5 லட்சம்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் - ரூ.2.25 லட்சம்
தலைமை தேர்தல் ஆணையர் - ரூ.2.5 லட்சம்
இந்தியத் தலைமை தணிக்கையாளர் (CAG) - ரூ.2.5 லட்சம்
யுபிஎஸ்சி தலைவர் - ரூ.2.5 லட்சம்
கேபினட் செயலாளர் - ரூ.2.5 லட்சம்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications