ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகின்றன. அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நிலவும் ஆனால் பெரிய ராணுவ நடவடிக்கை எதுவும் சமீப காலங்களில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் திடீரென பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா இராணுவம் இஸ்ரேல் ராணுவத்தோடு இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தது. பதிலுக்கு ஈரானும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரக்கூடிய இந்த போர் பல்வேறு நாடுகளிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஈரான் மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் நிலவக்கூடிய போர் காரணமாக உலக கச்சா எண்ணெய் சந்தையே ஸ்தம்பித்து போயிருக்கிறது.

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

உலகிற்கே தேவையான பெரிய அளவிலான கச்சா எண்ணெய் மேற்காசிய நாடுகளில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தப் போர் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் கச்சா எண்ணெய் விநியோகத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பெருமளவு உயர்த்தியது. குறிப்பாக நேற்றைய தினம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 119 அமெரிக்க டாலர்கள் என வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலையை எட்டியது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது இந்தியாவிற்கு கெட்ட செய்தி. ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயரும் போது நாம் அதிக அளவில் நம் கையில் இருக்கக்கூடிய ரூபாயை செலவு செய்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். எனவே இது உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு வழிவகை செய்து உணவுகள் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும்.

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

இத்தகைய சூழலில் தான் நேற்றைய தினம் ஒரு பேரலுக்கு 119 டாலர் என உயர்ந்த பிரண்ட் கச்சா எண்ணெய் திடீரென விலை சரிவு கண்டது. அதாவது ஒரே நாளில் 27 சதவீதம் சரிவடைந்து 86 டாலர்கள் என விலை குறைவு கண்டிருக்கிறது. ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் வெளியிட்ட ஒரு அறிவிப்பே காரணம். ஈரான் போர் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி ஒன்றில் கூறினார்.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து ஒரு பேரல் 86 டாலர்கள் என குறைந்தது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசனை செய்து வருவதாக கூறியிருக்கிறார். இந்த தகவலை வெளியிட்ட உடனேயே பிரண்ட் கச்சா எண்ணெய் ஃபியூச்சர் விலை ஒரு பேரல் 6.51 டாலர்கள் குறைந்து 92.45 டாலர்கள் என்றும் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 6.12 டாலர்கள் குறைந்து 86.65 டாலர்கள் என்றும் சரிவடைந்தன.

அதாவது ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலைகள் 100 டாலருக்கு மேல் சென்று மீண்டும் 100 டாலருக்கும் கீழ் சரிந்திருப்பது இதுவே முதன் முறையாகும். முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் ஆகியோர் தொலைபேசி வாயிலாக ஈரான் போர் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றனர். அப்போது இந்த போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்பும் ஆலோசித்ததாக தகவல் தெரிவிக்கிறது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் சிபிஎஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் ஈரானுக்கு எதிரான போர் கிட்டத்தட்ட முடியும் தருவாய்க்கு வந்து விட்டதாக கூறியிருக்கிறார். நான்கு முதல் ஐந்து வாரங்களில் முடிக்க வேண்டிய வேலைகளை கிட்டத்தட்ட ஒரு வார காலத்திலேயே அமெரிக்கா முடித்து விட்டதாக அதில் அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால் ஈரான் ராணுவமோ போர் எப்போது முடிய வேண்டும் என்பதை ஈரான் தான் முடிவு செய்யும் என கூறியிருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்தும் வரை ஒரு லிட்டர் பெட்ரோல் கூட இந்த பிராந்தியத்தில் இருந்து வெளியே செல்ல முடியாது என கூறியுள்ளது.

கச்சா எண்ணெய் விநியோக தடை பல்வேறு நாடுகளுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி இருப்பதால் அவை அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டன. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிலைமை சீராகும் வரை கச்சா எண்ணெய் தொடர்பான சில தடைகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளார். இது மேற்கொண்டு எண்ணெய் விநியோகம் சீரடையும் என்ற நம்பிக்கையை சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+