கனவில் கூட நினைத்திருப்போமா என்று தெரியவில்லை, கச்சா எண்ணெய் விலை மைனஸில் செல்லும் என்று. ஆனால் அந்தளவுக்கு கடந்த ஏப்ரலில் சரிவினைக் கண்டது. ஆனால் இறங்கிய அதே வேகதத்தில் தற்போது மீண்டு வந்து கொண்டுள்ளது.
உலகளவில் பரவி வரும் கொரோனாவினால் நடந்த நல்ல விஷயங்களில் ஒன்று தான் கச்சா எண்ணெய் விலை சரிவு. ஆனால் அந்த சந்தோஷமும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சரிவிலேயே இருந்த கச்சா எண்ணெய் விலையானது, தற்போது பேரலுக்கு மீண்டும் 50 டாலர்களை நெருங்கி விட்டது.
பெரும் சவால்
கச்சா எண்ணெய் விலை சரிவு இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு நல்ல விஷயமாக கருதப்பட்டாலும், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு இது பெரும் சவாலாக இருந்தது. அந்த சமயத்தில் பல எண்ணெய் நிறுவனங்கள் திவால் நிலைக்கே கூட சென்றன. ஏனெனில் தங்களின் முழு நேர வர்த்தகமும், முழு வருமான ஆதாரமாகவும் உள்ள எண்ணெய் விற்பனையில் துண்டு விழும்போது பிரச்சனை ஏற்படத்தானே செய்யும்.
தேவை சரிவு
கடந்த பல மாதங்களாகவே கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் வைரஸினால், உலக நாடுகள் ஸ்தம்பித்து போயிருந்தன. மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத வண்ணம் பல முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிறுவனங்கள் முடங்கி போயின. வாகனங்கள் ஓடவில்லை. பேருந்துகள் இயங்கவில்லை, ரயில்கள், விமான சேவைகள் என அனைத்து போக்குவரத்துகளும் முடங்கின. மொத்தத்தில் அத்தியாவசியம் தவிர, மற்றவை எல்லாம் பல மாதங்கள் முடங்கின. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையும் முடங்கியது.
லாக்டவுன் தளர்வுகள்
எனினும் தற்போது லாக்டவுனில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சாலைகள் வழக்கம் போல இயங்கத் தொடங்கியுள்ளன. வாகனங்களும் இயங்கி வருகின்றன. விமானங்கள் கூட பறக்க தொடங்கி விட்டன. இதன் காரணமாக தற்போது கச்சா எண்ணெய் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை தற்போது 0.47%% வீழ்ச்சி கண்டு, பேரலுக்கு 46.58 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நேற்று அதிகபட்சமாக 47.74 டாலர்கள் வரை தொட்டுள்ளது. இன்றும் சற்று ஏற்றத்தினை காணும் விதமாகவே காணப்படுகிறது. இது கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் -40.32 டாலர்கள் வரை சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 0.50% வீழ்ச்சி கண்டு 50 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் கிட்டதட்ட 15 டாலர்கள் வரை சென்று திரும்பியது.
கொரோனா தடுப்பூசியும் ஒரு காரணம்
கச்சா எண்ணெயின் இந்த விலை ஏற்றத்திற்கு கொரோனா தடுப்பூசி பற்றிய அறிவிப்புகளும் ஒரு காரணம். ஏனெனில் தடுப்பூசியானது அமலுக்கு வரும் பட்சத்தில், துவண்டு போன பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதனால் கச்சா எண்ணெய் தேவையானது அதிகரிக்கும் என்ற எண்ணமும் முதலீட்டாளர்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உற்பத்தியை குறைக்கலாம்
தற்போதே கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 50 டாலர்களை தொட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதனால் இன்னும் விலை அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தேவை அதிகரிக்கும் பட்சத்தில் உற்பத்தில் குறைந்தால் அது இன்னும் விலை அதிகரிக்கவே காரணமாக அமையும்.
பெட்ரோல் டீசல் விலை
கச்சா எண்ணெய் அதிகரிக்கும்பட்சத்தில் பெட் ரோல் டீசல் விலை என்னவாகுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. ஏனெனில் இந்தியா கச்சா எண்ணெய்க்காக அதிகளவு இறக்குமதியினை மட்டுமே நம்பியுள்ளது. இதன் காரணமாக விலை அதிகரிப்பு என்பது இந்தியாவினை அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்தும். இப்போதே பெட்ரோல் விலை சுமார் 87 ரூபாயினை தொட்டுள்ள நிலையில், இனி வரும் காலங்களில் என்ன ஆகுமோ?
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications