கச்சா எண்ணெய் தேவையானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், விலையும் மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
இது கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கடும் கட்டுபாடுகளினால், கச்சா எண்ணெய் தேவையானது மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் விலையினை கட்டுக்குள் வைக்க கொரோனா காலத்தில் உற்பத்தியினை குறைத்து, சப்ளையையும் குறைத்திருந்தனர்.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
ஆனால் தற்போது தேவை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் உற்பத்தி விகிதமானது அதிகரிக்கப்படவில்லை. இதனால் விலையானது மீண்டும் உச்சம் பெறத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த 2018-க்கு பிறகு தற்போது மீண்டும் பழைய உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் தற்போது கிட்டதட்ட 1% அதிகரித்து, 79.43 டாலர்களாக அதிகரித்து காணப்படுகின்றது.
WTI கச்சா எண்ணெய் விலை
WTI கச்சா எண்ணெய் விலையானது தற்போது கிட்டதட்ட 1% அதிகரித்து, 76.20 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்று 76.67 டாலர்கள் வரையில் சென்றுள்ளது. இது அனைத்து முக்கிய சப்போர்ட் லெவல்களையும் உடைத்துள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
தேவை அதிகரிக்கலாம்
தற்போது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டுள்ள நிலையில், தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. இந்த சமயத்தில் உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே விலை அதிகரிக்கும். இதற்கிடையில் தான் கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 10 டாலர்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
சப்ளை அதிகரிக்க வேண்டும்
தற்போது ஆயில் தேவையானது 0.5 மில்லியன் பேரல்கள் கூடுதலாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் சப்ளையை அதிகரிக்கவும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் சீனாவில் நிலவி வரும் பவர் சப்ளை பிரச்சனைக்கு மத்தியில், கோல் விலையானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் குளிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலைகள் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிலவரம்
எண்ணெய் சப்ளையானது இனி அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மறுபுறம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது மேற்கொண்டு விலையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications