ரஷ்யா-வை ஒதுக்கிய உலக நாடுகள்.. 14வருட உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. ஒரு பேரல் எவ்வளவு தெரியுமா?!

உக்ரைன் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரஷ்யா மீது பல நாடுகள் அனைத்து விதமான தடையை விதித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீதான தடை மட்டும் விதிக்கவில்லை.

ஆனாலும் ரஷ்யா மீது தடை விதித்த நாடுகள் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதைக் குறைத்துக் கொண்டு பிற நாடுகளிடம் இருந்து வாங்க துவங்கியுள்ளது.

ஆனால் உலகில் எந்த நாடும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காத காரணத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடுமையான தட்டுப்பாடு உருவாகி இதன் விலை உயர் துவங்கியது.

 ரஷ்யா கச்சா எண்ணெய்

ரஷ்யா கச்சா எண்ணெய்

இன்றைய வர்த்தகத்தில் ரஷ்யாவிடம் அதிகளவிலான கச்சா எண்ணெய் வாங்கும் ஐரோப்பியா நாடுகளின் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 120 டாலர் வரையில் உயர்ந்தது. இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 115 டாலர் வரையில் உயர்ந்து 2008ஆம் ஆண்டுக்கு பின்பு அதிகப்படியான உயர்வை பதிவு செய்தது.

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை


அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்தால் ரஷ்யாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறது, ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இது தத்தம் நாடுகளுக்குத் தான் பாதிப்பு, ஏற்கனவே உலக நாடுகளில் பணவீக்கம் அதிகப்படியாக இருக்கும் நிலையில் தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வின் மூலம் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகம் என்பது தான் உண்மை.

 OPEC நாடுகள்

OPEC நாடுகள்

மேலும் OPEC நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமைதியாக உள்ளது, ஏற்கனவே திட்டமிட்ட படி 400000 பேரல்களை ஏப்ரல் மாதம் முதல் கூடுதலாக உற்பத்தி செய்ய உள்ளது.

 13 நிமிட கூட்டம்

13 நிமிட கூட்டம்

புதன்கிழமை நடந்த OPEC அமைப்பின் கூட்டம் வெறும் 13 நிமிடத்தில் முடித்துவிட்டது மெக்சிகோ போன்ற நாடுகள் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை குறித்துப் பேசும் போது ஆலோசனையை வேறு பக்கம் திருப்பியது இதனால் உற்பத்தி அதிகரிப்பது குறித்து எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

 சர்வதேச எனர்ஜி அமைப்பு

சர்வதேச எனர்ஜி அமைப்பு

ஏற்கனவே சர்வதேச எனர்ஜி அமைப்பு எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்க மற்றும் பிற நாடுகள் தனது எண்ணெய் இருப்பைப் படிப்படியாக வெளியிட முடிவு செய்துள்ளது.

 130 டாலர்

130 டாலர்

ஆனால் இது அடுத்த 15 முதல் 25 நாள் வரையில் மட்டுமே சமாளிக்க முடியும், அதன் பின் கட்டாயம் ரஷ்யாவிடமோ அல்லது வளைகுடா நாடுகளிடம் கூடுதலாகக் கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய விலை உருவாகும், அதற்குள் கச்சா எண்ணெய் விலை 130 டாலரை தொடலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+