பீர் நிறுவனமான ப்ரூடாக் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜேம்ஸ் வாட் தனது பரிசுத் திட்டம் தவறாய் போன, ஒரு காஸ்ட்லியான சுவாரஸ்யமான விஷயத்தை லிங்க்ட் இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜேம்ஸின் சிறிய தவறு காரணமாக அவருக்கு 5 லட்சம் பவுண்டுகள் அல்லது 5 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட வேண்டிய நிலை குறித்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவரது லிங்க்ட் பக்கத்தில் வில்லி வோன்காவால் ஈர்க்கப்பட்ட அவர், 50 கோல்டு கேன் மூலம் பீரை நிரப்ப முடிவு செய்துள்ளார்.
வெற்றியாளர்களுக்கு பங்கும் உண்டு
இதற்காக தேடிப் பிடித்து ஒரு ஆபரண வடிவமைப்பாளரையும் கண்டுபிடித்துள்ளார். அந்த தங்க கேன்கள் தயாரிக்கப்பட்டு ஆலைக்கு கொண்டு வந்த பிறகு தான் அவருக்கு ஆச்சரியமே காத்திருந்ததாகவும், அது பார்க்க மிக அழகாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்புடன் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ப்ரூடாக் நிறுவனத்தின் 15,000 பவுண்ட் மதிப்பிலான பங்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
காஸ்ட்லியான தவறு
வாடிக்கையாளர்களுக்கு பரிசினை கொடுக்க வேண்டும். தனது நிறுவனத்தினை பிரபலபடுத்த வேண்டும் என்ற உற்சாகத்தில் இருந்த ஜேம்ஸ், அதில் செய்த காஸ்ட்லியான தவறினையும் பகிர்ந்துள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட கேன்களை, நான் முழுவதும் தங்கத்தினால் செய்யப்பட்ட கேன் என நினைத்துவிட்டேன். மிக உற்சாகத்தில் இருந்த நான் அதனை தவறாக புரிந்து கொண்டேன்.
முட்டாள்தனமான ஒரு செயல்
இது குறித்து ட்விட்டர் பக்கத்திலும் ஜேம்ஸ் பகிர்ந்துள்ளார். அதில் தங்க கேன் என பகிர்ந்ததாகவும், வாடிக்கையாளர்களும் அதனை சுத்த தங்கத்தினால் செய்த கேன் ஆக இருக்கும் என நினைத்தனர். ஆனால் அது தங்கம் முலாம் பூசப்பட்டது தான். இது எனது முட்டாள்தனமான ஒரு செயல். இது எனக்கு பெரும் செலவினை ஏற்படுத்துமென்பதை பிறகு தான் புரிந்து கொண்டேன் என லிங்க்ட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் அதிருப்தி
வெற்றிபெற்றவர்கள் தங்க கேன்களை பெற்றவுடன் தான் பிரச்சனை இன்னும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வாடிக்கையளர்கள் முழுமையாக தங்கமாக இருக்கும் என நினைத்தவர்களுக்கு, அது வெறும் தங்க முலாம் பூசப்பட்ட கேன் என்பது அதிர்ச்சியளித்துள்ளது. அவர்கள் புகார் அளிக்க தொடங்கிய பின்னர் பிரச்சனை இன்னும் அதிகரித்தது. ஜேம்ஸின் முந்தைய அறிவிப்பினை நினைவுகூர்ந்த வாடிக்கையாளர்கள் சுத்தமான தங்கம் கேன் கொடுப்பதாக கூறி, தங்க முலாம் பூசப்பட்ட கேனை தந்துள்ளார்கள் என அதிருப்தி அடைந்துள்ளனர்.
தவறான விளம்பரம்
மேலும் ப்ரூடாக் நிறுவனம் தவறான தகவல்கள் மூலம் வாடிக்கையாளர்களை வழி நடத்தி செல்வதாகவும் ASAவும் தீர்பளித்துள்ளது. இது மீடியாக்களிலும், சமூக வலைதளங்க்ளிலும் பெரும் புயலாக கிளம்பியுள்ளது. ஒரு ஆர்வத்தில் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய எடுத்த ஒரு திட்டம், இப்படி தவறான ஒன்றாக மாறியதை நினைத்து வருந்தும் நேரத்தில், பல சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளார்ஜேம்ஸ். நான் மிக கவனமாக இருந்திருக்க வேண்டும். அதனை சரிபார்த்திருக்க வேண்டும். அதனை மிக தாமதமாக செய்து விட்டேன். இது ஒரு கசப்பான சம்பவம்.
என்னுடைய பொறுப்பு தான்
நாங்கள் நேர்மையற்றவர்களாக கருதப்பட்டோம். ஆன்லைனிலும் மீடியாக்களிலும் பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டோம். நான் எனது வணிக வரலாற்றில் சிறந்த ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நினைத்து செய்த ஒரு செயல், மிகவும் தவறான ஒன்றாக மாறியது. இது என்னுடைய தவறு. என்னுடைய தவறு மட்டுமே. அதனை சரி செய்வதும் என்னுடைய பொறுப்பு தான். இதனை சரி செய்ய 50 வெற்றியாளர்களை தனியாக அழைத்து பேசினேன்.
பணமாக பரிசு
அவர்கள் எங்கள் பரிசில் மகிழ்ச்சியடையவில்லை என்றால், அவர்களுக்கு மாற்றாக தனிப்பட்ட முறையில் முழுப் பணத்தை வழங்குவேன். எனது தவறினால் வணிகம் பாதிக்கப்பட கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆக வெற்றியாளர்களுக்கு பணம் கொடுப்பதாக நான் உறுதியளித்தேன்.
இரண்டரை வருட சம்பளம்
இதன் மூலம் எனக்கு சுமார் 4,70,000 பவுண்ட்கள் செலவாகியது. இது சுமார் எனது இரண்டரை ஆண்டுகளுக்கு மேலான சம்பளம். எங்களின் வளர்ச்சிக்காக நான் போட்ட மூன்று விலையுயர்ந்த ட்வீட்களால், நான் செய்த தவறினையும் உணர்கிறேன். எது எப்படியோ நான் 40 தங்க கேன்களுக்கு உரிமையாளராக இருந்துள்ளேன்.. என நொந்துபோய் தனது லிங்கிட் இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
என்ன செய்யலாம்?
இறுதியாக அவர்களை என்ன செய்ய வேண்டும். எனக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை. உங்களது யோசனைகளை கூறுங்கள். அனைத்து யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன என்றும் பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications