பிரிக்ஸ் நாடுகளின் நியூ டெவலப்மெண்ட் பாங்க் (NDB) நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT City) இந்தியாவின் பிராந்திய அலுவலகத்தைத் திறக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்திய பிராந்திய அலுவலகம்
நியூ டெவலப்மெண்ட் பாங்க் தலைமையகத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்படும் இந்திய பிராந்திய அலுவலகம், ஆரம்ப திட்ட தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி, பைப்லைன் டெவலப்மெண்ட், திட்ட செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு மற்றும் பிராந்திய போர்ட்ஃபோலியோ மேலாண்மை உள்ளிட்ட திட்ட உருவாக்கத்தில் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளது.
நியூ டெவலப்மெண்ட் பாங்க்
2015-ம் ஆண்டு ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட, நியூ டெவலப்மெண்ட் பாங்க் பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றால் நிறுவப்பட்டுள்ளது.
பிற நாடுகள்
ஐந்து நிறுவன உறுப்பினர் நாடுகளைத் தவிர, வங்க தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), உருகுவே மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் வங்கியின் உலகளாவிய விரிவாக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் உறுப்பினர்களாக நியூ டெவலப்மெண்ட் பாங்க் அனுமதித்துள்ளது.
இந்திய அலுவலகத்தின் திட்டம்
கடன் வாங்குபவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் நியூ டெவலப்மெண்ட் பாங்கின் ஈடுபாட்டை மேம்படுத்துவதில் இந்திய பிராந்திய அலுவலகம் முக்கிய பங்காற்றுகிறது. இந்திய பிராந்திய அலுவலகம் திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்துவதில் பங்களிக்கும் என்று நியூ டெவலப்மெண்ட் பாங்க் தலைவர் மார்கோஸ் ட்ராய்ஜோ தெரிவித்தார்.
நோக்கம்
வங்கியின் இந்திய அலுவலகம் துவக்கமானது, நியூ டெவலப்மெண்ட் பாங்க்கின் கட்டளைக்கு ஏற்ப, தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்குப் பங்களித்து, இந்தியா மற்றும் வங்க தேசத்தில் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இயக்குநர் ஜெனரல் நியமனம்
வங்கி அலுவலகத்தைத் திறப்பதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்திய பிராந்திய அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் நியமனம் குறித்து நியூ டெவலப்மெண்ட் பாங்க் விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications