ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தகுந்த வரனை தேடி திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் தற்போது மேட்ரிமோனியல் மூலம் தான் அதிக திருமணங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்ரிமோனி தளத்தில் மணமகன் மற்றும் மணமகள் தேடுபவர்கள் தங்களுடைய சுய விவரங்களை பதிவு செய்து வருவதும் அந்த சுய விவரங்களை பார்த்து அவர்களுக்கு பொருத்தமான வரன் அமைவதுண்டு.
இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தனக்கு வரப்போகும் கணவர் குறித்த எதிர்பார்ப்புகளையும் நிபந்தனைகளையும் பதிவு செய்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
மணமகள் நிபந்தனை
மேட்ரிமோனியல் தளத்தில் இளம் பெண் ஒருவர் தனது சுய விபரத்தை பதிவு செய்து தனது எதிர்கால மணமகனின் எதிர்பார்ப்பு குறித்தும் பதிவு செய்துள்ளார். முதல்கட்டமாக அவருக்கு வரப்போகும் கணவருக்கு 24 வயதுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். அதாவது 1992-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பாக அவர் பிறந்திருக்க கூடாது என்பதுதான் அவரது முதல் நிபந்தனை.
கல்வித்தகுதி
அதன் பிறகு அவர் மணமகனின் கல்வித்தகுதி குறித்து கூறியது தான் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மணமகனின் கல்வித்தகுதி என்பது, MBA, MTech, MS, PGDM. ஆகியவற்றில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுவும் பொறியியல் பட்டத்தை அவர் பம்பாய், கான்பூர், டெல்லி, ரூர்க்கி, காரக்பூர், குவாஹாட்டி ஆகிய ஏதாவது ஒரு ஐஐடியில் படித்து இருக்க வேண்டும். மேலும் கோழிக்கோடு, டெல்லி, குருக்ஷேத்ரா, ஜலந்தர், திருச்சி, வாரங்கல். ஐஐடி ஹைதராபாத், அலகாபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய NITயில் படித்திருக்க வேண்டும். இல்லையெனில் IISc பெங்களூர், BITS பிலானி, ஹைதராபாத், DTU, NSIT, மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்த்ஹிருக்கலாம். MBA பட்டம் என்றால் அகமதாபாத், பெங்களூர், கல்கத்தா, இந்தூர், லக்னோ, கோழிக்கோடு ஆகிய IIM கல்வி நிலையங்களில் படித்திருக்க வேண்டும் என்பதுதான் அவரது நீண்ட நிபந்தனை.
சம்பளம்
கல்வித்தகுதியை அடுத்து சம்பளத்தை பொருத்தவரை வருடத்திற்கு ரூ.30 லட்சத்துக்கு குறையாமல் சம்பளம் வாங்கும் நபராக இருக்க வேண்டும் என்றும் கார்ப்பரேட் துறையில் பணிபுரிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
உடலமைப்பு - குடும்ப விவரம்
மேலும் மணமகன் 5'7" முதல் 6' வரை இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி மணமகனின் குடும்பம் சிறியதாக இருக்கவேண்டும். அதிகபட்சமாக மணமகனுக்கு இரண்டு உடன்பிறப்புகள் தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகள்
மணமகள் தனது திருமணத்திற்காக விதித்த நிபந்தனைகள் குறித்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு பெண் தனது எதிர்கால கணவரை தேர்வு செய்ய சில நிபந்தனைகள் விதிக்கலாம், அதில் தவறில்லை. ஆனால் ஒரு கணவனை வேலைக்கு அமர்த்துவது போன்ற நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல என பெரும்பாலானோர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications