மணமகள் ஒருவர் தன்னுடைய மெஹந்தி சடங்கின் போது தான் லேப்டாப் கொண்டு வேலை செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் உங்களுக்கு இன்போசிஸ் நாராயணமூர்த்தி வேலை வழங்க தயாராக இருக்கிறார் என கிண்டல் செய்துள்ளனர்.
இந்தியாவில் அண்மை காலமாகவே வொர்க் லைஃப் பேலன்ஸ் எனப்படும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை ஆகியவற்றுக்கு இடையே சமநிலை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. வேலைப்பளு காரணமாக ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதால் அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உடல்நிலை , மனநிலை ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என கூறுவது பெரிய விவாத பொருளாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டும் என கூறினார். அதேபோல எல்&டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஊழியர்கள் பணி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இதனால் ஊழியர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என பலரும் கூறிவரும் நிலையில் மணமகள் ஒருவர் தன்னுடைய மெஹந்தி நிகழ்வின் போது கையில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது எப்பொழுது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
ஆனால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ மற்றும் புகைப்படம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த பெண்மணி வேண்டுமென்றே தான் வேலை செய்கிறேன் என்பதை காட்டுவதற்காகவே மெஹந்தி நிகழ்வில் கூட வேலை செய்திருக்கிறார் என ஒரு நபர் விமர்சனம் செய்துள்ளார். ஒரு நபர் ஏன் உங்கள் நிறுவனத்தில் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு கூட விடுமுறை கிடைக்காதா என கூறியுள்ளார்.
ஒரு நபர் நாராயணமூர்த்தி உங்களைப் போன்ற நபரை தான் வேலைக்கு தேடிக் கொண்டிருக்கிறார் எனக் கிண்டல் செய்துள்ளார். ஒரு நபர் சுப்ரமணியன் உங்களைப் போன்ற நபரை தான் தேடிக் கொண்டிருக்கிறார் அவரிடம் நீங்கள் நேர்காணலுக்கு சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு வேலையும் அதிக சம்பளம் கிடைக்கும் என கிண்டலாக கூறியுள்ளார்.
இந்த பெண் உண்மையிலேயே வேலைதான் செய்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை ஏனெனில் ஒரு கையில் செல்போன் ஒரு கையில் லேப்டாப் வைத்திருக்கிறார் என ஒரு பயனர் கூறியுள்ளார். திருமணத்திற்காவது நீங்கள் லீவு எடுக்கலாம் உங்கள் நிறுவனத்தை ஒன்றும் இழுத்து மூடி விட மாட்டார்கள் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications