சென்னை: பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடிய ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரைகேட் (Brigade) குழுமம் சென்னையில் 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த குழுமம் கிட்டத்தட்ட 15 மில்லியன் சதுர அடி பரப்பளவில் பல்வேறு கட்டுமான திட்டங்களை சென்னையில் முன்னெடுக்க உள்ளது.
குடியிருப்புகள், அலுவலகம், சில்லறை கடைகள் மற்றும் தங்குமிடங்கள் என சுமார் 15 மில்லியன் சதுர அடிக்கு கட்டடங்களை கட்டி விற்பனை செய்யப் போவதாக இந்த குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் 12 மில்லியன் சதுர அடி மதிப்பிலான குடியிருப்பு திட்டங்களின் மொத்த வளர்ச்சி மதிப்பு சுமார் 13,000 கோடி ரூபாய் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக சென்னை மவுண்ட் சாலையில் இந்த நிறுவனத்தின் Brigade Icon என்ற கட்டடம் அமைக்கப்பட உள்ளது.
Brigade Iconaஇ பொறுத்தவரை குடியிருப்புகள், சில்லறை வர்த்தக கடைகள், அலுவலகங்கள் என அனைத்தும் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டடக் கலை நிறுவனமான சிங்கப்பூரை சேர்ந்த SOG Design இதனை வடிவமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டத்தில் விற்பனை மதிப்பு மட்டும் 1800 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த குழுமம் ஏற்கனவே 5 மில்லியன் சதுர அடிக்கு குடியிருப்புகள், அலுவலகங்கள், தங்குமிடங்கள் மற்றும் ரீடெய்ல் ரியல் எஸ்டேட் பணிகளை முடித்துள்ளது. சென்னையில் இதன் அடையாள திட்டமாக உலக வர்த்தக மையத்தை கூறலாம்.
புதிதாக கட்டப்போகும் 15 மில்லியன் சதுர அடியில் நடப்பு நிதியாண்டிலேயே 3 மில்லியன் சதுர அடி குடியிருப்பு திட்டங்களும்,1 மில்லியன் சதுர அடி வணிக கட்டட பணிகளும் நிறைவு பெறும் என இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பவித்ரா சங்கர் கூறியுள்ளார்.
புதிய திட்டங்கள் மூலம் பிரைகேட் குழுமம் பெங்களூருக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான பணிகளை மேற்கொண்டிருக்கும் நகரமாக சென்னை உருவாகும். பிரைகேட் குழுமம் குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், சில்லறை விற்பனையகங்கள், தங்குமிடங்கள் என நான்கு பிரிவுகளிலுமே இரண்டு மடங்கு வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே சென்னை பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. ஏற்கனவே உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற போது மாநில அரசுடன் நான்கு திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் இந்நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
1986ஆம் ஆண்டு பெங்களூருவில் நிறுவப்பட்டது தி பிரைகேட் குழுமம். இந்நிறுவனம் பெங்களூரு, சென்னை , ஐதராபாத், மைசூரு, கொச்சி , குஜராத் கிஃப்ட் சிட்டி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய நகரங்களின் அடையாளங்களாக விளங்க கூடிய பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications