தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது உச்சம் தொட்டு வரும் நிலையில், எனர்ஜி பொருட்கள் விலைகள், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கம் என பல காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றது.
அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் நடப்பு நிதியாண்டில் 19.48 சரிவிலும், நாஸ்டாக் இன்டெக்ஸ் 30.95% சரிவிலும், பிரெஞ்ச் இன்டெக்ஸ் 19.34% சரிவிலும், ஜெர்மன் டேக்ஸ் 23.02% சரிவிலும் காணப்படுகின்றது.
பிரைட்காம் குழும பங்கு
சென்செக்ஸ் செப்டம்பர் 26 நிலவரப்படி, 1.92% சரிவில் காணப்படுகின்றது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஐடி துறை பங்கான பிரைட்காம் குழும பங்கின் விலையானது நடப்பு நிதியாண்டில் மிகப்பெரிய இழப்பினை கண்டுள்ளது. இது இந்த ஆண்டில் 67.7% சரிவினைக் கண்டுள்ளது. இந்த பங்கின் விலை செப்டம்பர் 26 நிலவரப்படி, 34.65 ரூபாயாக இருந்தது. இது டிசம்பர் 31, 2021ல் 107.43 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தன்லா பிளார்ட்பார்ம்ஸ் & ஜென்சார் டெக்னாலஜி
இந்த லிஸ்டில் உள்ள மற்றொரு ஐடி பங்கு தன்லா பிளார்ட்பார்ம்ஸ். இது நடப்பு ஆண்டில் 62% சரிவினைக் கண்டுள்ளது. கடந்த டிசம்பர் 1888.45 ரூபாயாக உச்சத்தில் இருந்தது. இது 717 ரூபாய் என்ற லெவலுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
இதே ஜென்சார் டெக்னாலஜி பங்கு விலையானது 58.3% சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இறுதியில் 521.9 ரூபாயாக இருந்தது, கடந்த அர்வில் 217.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
சோமேட்டோ & மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர்
உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ இந்த லிஸ்டில், இந்த பங்கானது 57.9% சரிவினைக் கண்டுள்ளது. இது 137.45 ரூபாயில் இருந்து, 57.85 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் பங்கு விலையானது, 56.2% சரிவினைக் கண்டு, 1505.95 ரூபாயாக கடந்த அமர்வில் முடிவடைந்தது. இது கடந்த ஆண்டின் இறுதியில் 3439.55 ரூபாயாக முடிவடைந்தது.
மேற்கொண்டு சரிவு
நிதித்துறையை சேர்ந்த இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம், 53.9% சரிவினைக் கண்டும், ரியல் எஸ்டேட் டெவலப்பரான திலீப் பில்ட்கான் 51.1% சரிவினைக் கண்டும், டெக்ஸ்டைல் பங்கான வெல்ஸ்பென்ஸ் இந்தியா பங்கு விலையானது, 49.9% சரிவினைக் கண்டும், பிபிடெக் பங்கு விலையானது 49.6% சரிவினைக் கண்டுள்ளது.
பிஎஸ்இ 500 இன்டெக்ஸ்
பிஎஸ்இ 500 இன்டெக்ஸ்-ல் உள்ள 28 பங்குகள் 40% அதிகமான சரிவினைக் கண்டுள்ளன.
குறிப்பாக பிஎஸ்இ ஐடி 28.2%, பிஎஸ்இ டெக் 24.3%, பிஎஸ்இ ரியால்டி, பிஎஸ்இ மெட்டல் 13.7% மற்றும் 7.3%மும் சரிவினைக் கண்டுள்ளன. அதே சமயம் பிஎஸ்இ பவர் 37.8% ஏற்றமும், பிஎஸ்இ ஆட்டோ16.3%மும், பிஎஸ்இ பாஸ்ட் மூவிங் கன்சியூமர் குட்ஸ் 16.2%, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் பங்குகள் 9.5%மும், 8% ஏற்றமும் கண்டது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications