தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை.. சுப நிகழ்ச்சிகளுக்கு புனித நீரை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்!

ஆடி மாதம் வந்துவிட்டால் போதும் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு கோவிலில் தான் இருப்பார்கள். அதிலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை இன்னும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒன்று. அமாவாசை அன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கங்கை நீரில் நீராடுவது முக்கியமான ஒரு வழிபாட்டு முறையாகும். ஆனால், கங்கை நதிக்கு நேரில் சென்று நீராட முடியாதவர்களுக்காக, இந்திய அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

போஸ்ட் ஆபீஸ் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை வழங்கி வந்தது தான் பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது கங்கோத்ரி மலையில் இருந்து புனித கங்கை நீரை எடுத்து வந்து பல ஊர்களுக்கும் விற்பனை செய்து வருகிறது. சுமார் 395 தபால் நிலையங்களிலும் இந்த கங்கை நீர் கிடைக்கிறது. இதன் விலை 30 ரூபாயாக உள்ளது.

 தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை.. சுப நிகழ்ச்சிகளுக்கு புனித நீரை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்!

ஆகஸ்ட் 4-ஆம் தேதி கொண்டாடப்படும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல பகுதிகளில் இருக்கும் அஞ்சல் அலுவலகங்களில் புனித நீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புனித நீரின் ஒரு பாட்டில் விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட பாட்டில்களின் எண்ணிக்கை 943.

இந்திய அஞ்சல் துறை புனித கங்கை நீரை உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி மலையில் இருந்து எடுத்து வந்து அதன் பின் அதனை சுத்தம் செய்து இந்தியா முழுவதும் இருக்கும் பல இடங்களுக்கு வழங்கும் பணியை தற்போது செய்து வருகிறது.

நம் நாட்டில் எப்போதும் பாரம்பரிய விஷயங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும். அதன் அடிப்படையில் புதிய தொழில் துவங்குவது, சுப நிகழ்ச்சிகள், புதுமனை புகுவிழா என அனைத்திற்கும் கங்கை நீரை வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தப் புனித நீர் தேவைப்படுபவர்கள் ஆன்லைனில் எளிதில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி அன்று ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் போது சகோதரிகள் இணைந்து சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக ராக்கிகளை கட்டுவார்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்த பண்டிகையை கொண்டாட முடியாமல் தவிக்கும் சகோதரர் மற்றும் சகோதரிகளுக்காக போஸ்ட் ஆபீஸ் முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

ராக்கிகளை அனுப்புவதை எளிதாக்குவதற்காக தபால் நிலையங்களில் தற்போது கவர்கள் மற்றும் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இவை இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு பாதுகாப்பாக ராக்கிகளை அனுப்ப உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களுக்கு இங்கிருந்தே அன்பை பரிமாறும் விதமாக ராக்கிகளை பத்திரமாக அனுப்ப முடியும். இதற்காக தபால் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+