பிரிட்டன் நாட்டின் முன்னணி பின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிவால்ட் நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வர திட்டம் தீட்டியுள்ளது. சுமார் 5.5 பில்லியன் டாலர் அளவில் மதிப்பீடு செய்யப்படும் இந்த வங்கி சேவை நிறுவனமான ரிவால்ட் இந்தியாவிற்கு வருவது மூலம் குறைந்தப்பட்சம் 200 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்து ரிவால்ட் நிறுவனத்தின் தலைவர் நிகோலே ஸ்டாரான்ஸ்கை கூறுகையில் இந்தியர்களின் திறனின் அளவு என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் எங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில் குறைந்தபட்சம் 200 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.

ரிவால்ட் நிறுவனம் உலகில் வேறு எந்த நிறுவனம் அளித்திடாத வகையில் கமிஷன் இல்லாத இலவச பங்குச்சந்தை வர்த்தகச் சேவை, கட்டணம் இல்லா சர்வதேச பணப் பரிமாற்ற சேவைகளை வழங்கி வருகிறது.
இதன் மூலம் பிரிட்டனில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்று 5.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றுள்ள இந்த ரிவால்ட் நிறுவனம் தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பல பின்டெக் நிறுவனங்கள் இருக்கும் வேளையில் போட்டி அதிகமாக இருக்கிறது.
இந்தப் போட்டியை எளிதாகச் சமாளித்து அதிகப்படியான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெற முடியும் என ரிவால்ட் நிறுவனத்தின் தலைவர் நிகோலே ஸ்டாரான்ஸ்கை நம்பிக்கை தெரிவித்துள்ளார். அக்டோபர் 2019ல் ரிவால்ட் நிறுவனம் பிரிட்டனை தாண்டி சுமார் 24 புதிய சந்தைகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது.


Click it and Unblock the Notifications