பிரிட்டன்: பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிரிட்டன் கடற்படைக்கு அணு உலைகளை வடிவமைத்து தருவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பிரிட்டன் அரசுக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது 9000 கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிரிட்டன் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களை இயக்குவதற்கு தேவையான அணு உலைகளை வடிவமைப்பது ,தயாரிப்பது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

8 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சகம் பிரிட்டனின் கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. எப்போதுமே ஒரு அணு ஆயுத ஏவுகணை கொண்ட நீர்மூழ்கி கப்பலாவது எல்லா நேரங்களிலும் ரோந்து பணியில் ஈடுபடுவதை இது உறுதி செய்யும் என கூறியுள்ளது.
அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவுடன் செய்யப்பட்டுள்ள ஆகஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இது மேலும் வலுப்படுத்தம் என பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அரசு யூனிட்டி என பெயர் சூட்டி உள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜான் ஹலி, பிரிட்டன் அரசு பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் அதே வேளையில் பிரிட்டன் மக்களின் வேலை வாய்ப்பையும் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு சான்று என கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டனை சேர்ந்த உயர்திறன் கொண்ட ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார் .மத்திய இங்கிலாந்தின் டெர்பி பகுதியில் தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அணு உலை இருக்கிறது. இந்த யூனிட்டி ஒப்பந்தத்தின் மூலம் ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் நான்காயிரம் பேரின் வேலை வாய்ப்பு தக்கவைக்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் 400 மில்லியன் பவுண்டுகளை சேமிக்க உதவும் என்றும் பிரிட்டன் அரசு கூறுகிறது.
யூனிட்டி ஒப்பந்தத்தின் மூலம் புதிய வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படும் என்றும் அது ஆகஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து ,அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன். இதனை ஆகஸ் ஒப்பந்தம் என அழைக்கின்றனர்.
இதன் மூலம் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் கட்டப்படும் அதே வேளையில் மூன்று நாடுகளின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications