லண்டன்: பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பிரிட்டனில் வந்து வேலை செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் தகவல் தொழில்நுட்பம், டெலிகாம் மற்றும் பொறியியல் நிறுவனங்களில் பெரும்பாலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டன் அரசு தங்களுடைய விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்தியாவை சேர்ந்த தொழில் நிபுணர்கள் பெரிய பாதிப்பை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குறைந்தபட்ச வருமான வரம்பை அதிகரிப்பது அல்லது பிராந்திய அடிப்படையில் வருமான வரம்புகளை மாற்றுவது என்பன உள்ளிட்ட புதிய விசா நடைமுறைகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. பிரிட்டனின் உள்துறை செயலாளர் பெட்டே கூப்பர் இது தொடர்பாக பிரிட்டனின் குடியுரிமை ஆலோசனை கமிட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இதில் பிரிட்டனை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் டெலி கம்யூனிகேஷன் நிறுவனங்கள் வெளிநாட்டு நிபுணர்களை சார்ந்து இருப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டுள்ளாராம்.
பிரிட்டனில் குறிப்பிட்ட துறை சார்ந்த பணிகளுக்கு பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என பிரிட்டன் உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.
பிரிட்டனை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு என்னென்ன திறன்களில் குறைபாடு இருக்கிறது. அதனை எப்படி சரி செய்வது, பிரிட்டன் வேலைவாய்ப்பு சந்தையை எப்படி வலுவாக்குவது என்பது குறித்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பிரிட்டனில் வந்து பணியாற்றி நமது பொருளாதாரத்திற்கு உதவி செய்கிறது அவர்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் இந்த அமைப்பு முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டியது தற்போது அவசியமாகியுள்ளது என உள்துறை செயலாளர் கூறியுள்ளார். இது தொடர்பான அறிக்கை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. இந்த அறிக்கை அடிப்படையில் பிரிட்டன் அரசு விசா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது.
இதனிடையே கேர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பிரிட்டன் நாட்டவர்கள் மற்றும் பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்தவர்கள் தங்களது குடும்பத்தினரை இங்கே கொண்டு வருவதற்கு அவர்களுக்கு குறைந்தபட்ச வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மாற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு ஒரு நபர் பிரிட்டனில் குடும்பத்தினருடன் குடியேற வேண்டுமெனில் அவர்களின் ஆண்டு வருமானம் சுமார் 32 லட்சமாக இருக்க வேண்டும். இது உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications