உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் பொதுத் தேர்தல் பெரும் பரபரப்புடன் நடந்து முடிந்த நிலையில் நேற்று (இந்திய நேரப்படி அதிகாலை) எக்சிட் போல் முடிவுகள் வெளியானது. இந்தியாவைப் போலவே பிரிட்டனிலும் இரு பெரும் கட்சிகள் என்றால் தற்போது ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியும், தொழிலாளர் கட்சியும் தான்.
650 இடங்கள் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்தில் லேபர் கட்சியினர் 410 இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது. இதன் மூலம் 14 ஆண்டுகாலமாக ஆட்சியிலிருந்து கன்சர்வேடிவ் தலைமையிலான அரசாங்கம் முடிவுக்கு வருகிறது.

இந்த 14 ஆண்டுக் கால கன்சர்வேடிவ் ஆட்சியில் பல பிரச்சனைகளை இந்த அரசு சந்தித்தது. இதில் முக்கியமாக ரிஷி சுனக்-ன் பிரதமராக பதவியேற்றியது பிரிட்டன் வரலாற்றில் முக்கியமான நிகழ்வு. ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்தபோதே பல மோசமான தடுமாற்ற காலத்திலும் அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகத்தை பெரும் சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார்.
ஆனால் இது மக்களுக்கு போதுமானதாக இல்லை, மோசமான விலைவாசி காரணத்தால் இன்றளவும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கன்சர்வேடிவ் ஆட்சியின் இறங்கு முகம் பிரெக்சிட் பிரச்சனையில் இருந்து துவங்கியது. இதன் வெளிப்பாடே 410 இடங்களை லேபர் கட்சியினர் கைப்பற்றுவார்கள் என கணிப்புகள் வந்துள்ளது.
இந்த நிலையில் லேபர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமராக இருப்பார், வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் ஏற்கனவே லேபர் கட்சியினர் பெரும் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்திருந்த காணத்தால் நாட்டின் ஸ்டெர்லிங் பவுண்ட் மதிப்பு நிலையாக இருந்தது.
எக்ஸிட் போல் முடிவுகள் வெளியானதிற்கு முன்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 1.2758 டாலருக்கும், யூரோ மதிப்புக்கு எதிராக 84.74 பென்ஸ்-க்கும் வர்த்தகமானது.
இந்தியாவுக்கு பாதிப்பா..?: லேபர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் கொள்கை ரீதியில் இரு துருவம் என்பதால் பிரிட்டன் நாட்டின் புதிய ஆட்சியில் பல முக்கியமான மாற்றங்கள் வருவது நிச்சயம். இதனால் அந்நாட்டின் வர்த்தகம், பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் வரப்போகிறது.
இதேபோல் இந்த ஆட்சி மாற்றம் காரணமாக புதிய அதிபர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா உடனான நடப்புறவு எப்படியிருக்கும், இக்கட்சியின் கொள்கை முடிவுகள் இந்தியா - பிரிட்டன் வர்த்தகத்தைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியா பிரிட்டன் நாட்டில் ஐடி, நுகர்வோர், பேஷன், பார்மா, உற்பத்தி என பல துறையில் வர்த்தகம் செய்து வருகிறது. புதிய அதிபர் கெய்ர் ஸ்டார்மர் எடுக்கும் சிறிய மாற்றங்கள் கூட இந்தியா உடனான வர்த்தகம் பாதிக்கப்படும். இதேவேளையில் புதிய ஆட்சி மாற்றம் மூலம் பிரிட்டன் நாட்டின் விலைவாசி குறைந்து வட்டி விகிதம் குறைந்தால் இந்திய ஐடி துறையினருக்கு பெரும் வர்த்தக வாய்ப்பு காத்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications