இந்திய பிஸ்கட் மற்றும் பல்வேறு கேக் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கும் பிரிட்டானியா-வின் சிஇஓ வருண் பெர்ரி முக்கியமான விஷயத்தைத் தெரிவித்துள்ளார். இது முதலீட்டாளர்களுக்கும், மக்களுக்கும் முக்கியமான விஷயமாக உள்ளது.
சமீபத்தில் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் பணவீக்கத்தைச் சமாளிக்கத் தனது பொருட்களின் எடையைக் குறைத்து விலையைப் பழைய விலையிலேயே வைத்து வாடிக்கையாளர்களைத் தக்க வைத்து வருகிறது. இத்தகைய நிலைக்கு முக்கியமான காரணம் பணவீக்கம் அதிகரிப்பது தான்.

இதனால் ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தி பொருட்களில் துவங்கி சப்ளை செயின், டிஸ்ட்ரிபியூஷன் வரையில் விலையைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இதேபோல் இத்தகைய நுகர்வோர் பொருட்கள் மக்கள் தினமும் சாப்பிடும், முக்கிய உணவாக இருக்கும் காரணத்தால் விலையைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
இந்தியாவில் கோதுமை உற்பத்தி இந்த ஆண்டுச் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும், அரசின் இருப்பு அளவு குறைவாகவே உள்ளது. இருப்பினும் அரசு பல்வேறு திட்டத்திற்கு கோதுமை வாங்கும் காரணத்தால் இந்த ஆண்டு முழுவதும் கோதுமை விலை அதிகமாகவே காணப்படும்.
இந்தியாவில் கோதுமை உற்பத்தி இந்த ஆண்டுச் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும், அரசின் இருப்பு அளவு குறைவாகவே உள்ளது. இருப்பினும் அரசு பல்வேறு திட்டத்திற்குக் கோதுமை வாங்கும் காரணத்தால் இந்த ஆண்டு முழுவதும் கோதுமை விலை அதிகமாகவே காணப்படும்.
குறிப்பாகத் தேர்தலுக்குப் பின்பு கோதுமை விலை அதிகரிக்கக் கூடும் எனப் பிரிட்டானியா கணித்துள்ளது, மேலும் சர்க்கரை உற்பத்தி நாட்டில் சிறப்பாக இல்லை என்பதால் இதன் விலையும் அதிகரிக்கக் கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
இந்த நிலையைச் சமாளிக்க நிறுவனம் போதிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இப்போதே தேவையான உற்பத்தி பொருட்களை வாங்கத் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது பிரிட்டானியா. இதனால் பணவீக்கத்தைச் சமாளித்துப் பிரிட்டானியா அதிகப்படியான விற்பனையைப் பதிவு செய்ய உள்ளது.
மே 3 அன்று பிரிட்டானியா வெளியிட்ட மார்ச் காலாண்டு முடிவில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபம் ரூ.536.61 கோடியாக இருந்தது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.557.60 கோடியிலிருந்து 3.76 சதவீதம் சரிவை பதிவு செய்தது.
மேலும் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.4,069.36 கோடியாக உள்ளது, இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ.4,023.18 கோடியிலிருந்து 1.14 சதவீதம் உயர்ந்துள்ளது என்று பிரிட்டானியா நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் புதிய முயற்சிகளாலும், முதலீடுகளாலும் நடப்பு நிதியாண்டில் லாபத்தில் சில தடுமாற்றம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது பிரிட்டானியா.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications