பிரிட்டானியா நிறுவனம் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரம் தான் தற்போது பேசு பொருளாக உள்ளது. அப்படி அந்த விளம்பரத்தில் என்ன தான் இருக்கிறது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பிரிட்டானியா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய உனவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்.
குறிப்பாக பிஸ்கட் உள்ளிட்ட குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு தற்போது பெரிய பிரச்னை உருவெடுத்துள்ளது. இவர்கள் “Croissant” என்ற பிரெஞ்சு பேஸ்ட்ரியை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

வெண்ணெய் மற்றும் பிற பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதன் பெயரை சரியாக உச்சரிப்பது கிடையாது. பிரிட்டானியா நிறுவன ஊழியர்களே கூட"Croissant" ஐ சரியாக உச்சரிப்பதில்லை என புகார் உள்ளது.
இந்நிலையில் “Croissant” உச்சரிப்பு நிபுணர்களுக்கு அழைப்பு என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி “Croissant” ஐ சரியாக உச்சரிப்பவர்களுக்கு ஒரு நாள் இண்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு பெறுபவர்களுக்கு ஒரு நாள் இண்டர்ன்ஷிப் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஒரு நாள் முழுவதும் பிரிட்டானியா நிறுவனத்தில், “Croissant” பெயரை தவறாக உச்சரிப்பவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: இந்த இண்டர்ன்ஷிப் வாய்ப்புக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். பிரிட்டானியாவின் வாட்ஸ் அப் சேனல் வழியே ஒருவர் பதிவு செய்ய முடியும். பதிவு செய்வதற்கான லிங்க், பிரிட்டானியா “Croissant”இன் இன்ஸ்டாகிராம் பயோவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சில அடிப்படை கேள்விகள் கேட்கப்படும்.
அதற்கு பதில் அளித்தால், இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கொண்டு செல்லும். அங்கே பணிக்கு ஆள் தேவை என்ற போஸ்ட்டின் கீழ், இந்த இண்டர்ன்ஷிப் பெற நீங்கள் தகுதியானவர் என ஏன் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டாக தெரிவிக்க வேண்டும். மார்ச் 10ஆம் தேதி இரவு 12 மணியுடன் விண்ணப்ப காலக்கெடு முடிவடைகிறது.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும் நபர் ஒரு நாள் முழுவதும் பிரிட்டானியா நிறுவன அலுவலகத்தில், “Croissant” பெயரை தவறாக உச்சரிக்கிறவர்களுக்கு சரி செய்து முறையாக உச்சரிக்க வைக்க வேண்டும்.
மீம் மார்க்கெட்டிங் நிறுவனமான யங்கனின் கிரியேட்டிவ் ஐடியா இது என தெரிய வந்துள்ளது.
“Croissant” என்பது விலை உயர்வான உணவு பொருள் என்ற எண்ணம் மக்களிடையே நீடிக்கிறது. அதை மாற்றவும் மக்களிடையே இந்த பொருளை கொண்டு சேர்க்கவும் புதுமையான உத்தியை கையில் எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications