கென்யா பிஸ்கட் நிறுவனத்தை வாங்கிய பிரிட்டானியா.. இனி வித விதமா சுவைக்கலாம்..!

பிரிட்டானியா இண்ஸ்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கென்யாவின் கெனாஃப்ரிக் பிஸ்கட் லிமிடெட் (KBL) நிறுவனத்தின், 51% பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதே நேரம் கேடலிஸ்ட் பிரிட்டானியா பிராண்ட்ஸ் லிமிட்டெட் மீது, முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

கெனாஃப்ரிக் பிஸ்கட் லிமிடெட் நிறுவனம் கென்யா மற்றும் ஆப்பிரிக்கா சந்தையில் உற்பத்தி மற்றும் பிஸ்கட்களை விற்பனை செய்து வருகிறது.

கெனாஃப்ரிக் பிஸ்கட்

கெனாஃப்ரிக் பிஸ்கட்

கெனாஃப்ரிக் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் கையகப்படுத்தப்பட்ட பங்கு மதிப்பு 9.2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த கையகப்படுத்தலுக்கு பிறகு KBL, பிரிட்டானியவின் துணை நிறுவனமாகவும் மாறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் முழு வருவாய் விகிதம் என்ன? செயல்பாட்டின் மதிப்பு, என மற்ற விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. இந்த நிறுவனம் தற்போது கென்யாவின் நைரோபியில் KBL அதன் இருப்பினைக் கொண்டுள்ளது.

 

 பிரிட்டானியாவின் பிராண்டுகள்

பிரிட்டானியாவின் பிராண்டுகள்

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிகப்பெரிய பேக்கரி உணவு தயாரிப்பு நிறுவனமாகும். இது குட் டே, டைகர், நியூட்ரிசாய்ஸ், மில்க் பிகிஸ், மேரி கோல்ட், லிட்டில் ஹார்ட்ஸ் போன்ற இந்தியாவின் விருப்பமான பிராண்டுகளை உற்பத்தி செய்து வருகின்றது.

பல நாடுகளில் வணிகம்

பல நாடுகளில் வணிகம்

இன்று இந்திய குடும்பங்களில் இன்றும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களில் பிரிட்டானியா பிஸ்கட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நிறுவனம் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் GCC உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது.

பிரிட்டானியாவின் விரிவாக்கம்

பிரிட்டானியாவின் விரிவாக்கம்

ஏற்கனவே பல்வேறு சர்வதேச நாடுகளில் வணிகம் செய்து வரும் பிரிட்டானியா, இந்த விரிவாக்கத்தின் மத்தியில் மேலும் வெளி நாடுகளில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 13.04% குறைந்து, 337.44 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன் நிகர விற்பனை 9% அதிகரித்து, 3653.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் பிரிட்டானியாவின் பங்கு விலையானது இன்று 3767 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+