டெல்லி: பிரிட்டானியா என்றாலே 90s கிட்ஸ் முதல் இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் வரை அறிந்திருக்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு பட்டிதொட்டியெல்லாம் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் பாக்கெட்டுகளில் அடைத்த பிஸ்கட் உணவாகும்.
இந்த நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையின் படி, அதன் நிகரலாபம் 118% அதிகரித்து, 542.68 கோடி ரூபாயாக ஜூன் காலாண்டில் அதிகரித்துள்ளது.

இது பிஸ்கட்டுகளுக்கான வலுவான தேவை மற்றும் குக்கீஸ், கேக்குகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தான் வலுவான விற்பனையை எட்டியுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
'
இதே இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 26.6% அதிகரித்து, 3,420.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடுமையான பூட்டுதலால தொகுக்கப்பட்ட நுகர்வோர் பொருட்கள், நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல சவால்களுக்கும் மத்தியில் இப்படி ஒரு வலுமையான வருவாயினைக் கண்டுள்ளது. இது மார்ச் மாத இறுதியில் தொடங்கும் மே வரை சில வகையான தளர்வுகளின் கீழ் தொடர்ந்து சந்தையில் கடுமையாக விற்பனையை பாதித்தது. ஏனெனில் கொரோனா லாக்டவுன் காரணமாக பல சிறிய கடைகள் மூடப்பட்டது.
கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்த நாடு முழுவதும் செய்யப்பட்ட லாக்டவுன் காரணமாக, பல நுகர்வோர் தொழில் சாலைகள் உள்பட பலவும் தற்காலிகமாக மூடப்பட்டன. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் பல பிரச்சனைகளினால் உற்பத்தியினை பாதித்துள்ளது.
அதிலும் பரவி வரும் கொரோனாவின் காரணமாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் விற்பனையானது மிகவும் பாதித்தது. ஏனெனில் மக்கள் வைரஸ் பரவல் காரணமாக பயந்து வீட்டில் செய்யப்படும் உணவுகளையே அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர். எனினும் பிஸ்கட்கள் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. பிரிட்டானியா, நெஸ்டில் மற்றும் ஐடிசி உள்ளிட்டவை இதனால் சற்று பலன் அடைந்தன.
இதே மற்ற நுகர்வோர் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், டாபர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களும் முதல் காலாண்டில் லாபம் கண்டுள்ளன. இந்த நிறுவனம் லாபத்தில் இருந்தாலும், பங்கு விலையானது கிட்டதட்ட 2% வீழ்ச்சி கண்டு காணப்பட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications