சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் நாட்டின் பிரபலமான வோடபோன் நிறுவனத்தின் சிஇஓ Margherita Della Valle அடுத்த 3 வருடத்தில் 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த பணிநீக்கம் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டு ஊழியர்களை அதிகளவில் பாதிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டன் சந்தையில் இந்த அறிவிப்பின் அதிர்வலைகள் இன்னும் முடியாத நிலையில் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான BT குரூப் என அழைக்கப்படும் British telecomm, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 55000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது மட்டும் அல்லாமல், குறைந்தது 10000 பேரின் வேலைவாய்ப்புகள் செயற்கை நுண்ணறிவு மூலம் இப்பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பொதுவாக நிறுவனங்கள் பணிநீக்கம் செய்தாலும் வரும் காலத்தில் வர்த்தகம் விரிவாக்கம் அடையும் போது ஊழியர்களை சேர்ப்பது வழக்கம், ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் பல பணிகளை தொழில்நுட்பத்தின் மூலம் சரி செய்ய திட்டமிட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல் BT Group அறிவிப்பு அமைந்துள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
BT Group-இன் தலைமை நிர்வாக அதிகாரியான பிலிப் ஜான்சன் AI சந்தேகத்திற்கு இடமின்றி பெரிய அளவில் நமக்கு பயனளிக்கும் என இந்நிறுவன நிதிமுடிவுகளை வெளியிடும் போது முதலீட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளார். பிடி குரூப் நிறுவனத்தில் சுமார் 130,000 பேர் பணியாற்றுகின்றனர், இதில் 55000 பேரை 2030 ஆம் ஆண்டுக்குள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது BT Group.

ஏற்கனவே BT Group "Amy" என்ற AI சாட்போட் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்து, தேவையான தீர்வுகளை வழங்குகிறது. OpenAI இன் பிரபலமான ChatGPT போன்ற ஜெனரேட்டிவ் AI உடன் நிறுவனத்தின் தொடர்ச்சியான பரிசோதனைகள் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு வழிவகுக்கும் என்றும் BT Group-இன் தலைமை நிர்வாக அதிகாரியான பிலிப் ஜான்சன் கூறினார்.
இதேபோல் நிறுவனத்தில் பல சேவைகளை டிஜிட்டைஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார் BT Group-இன் தலைமை நிர்வாக அதிகாரியான பிலிப் ஜான்சன், இதன் மூலம் செலவுகள் குறைவது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை அளிக்க முடியும். அதிலும் குறிப்பாக வாடிக்கையாளர் சேவை மட்டத்தில் AI CHATBOT பெரும் மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பை கொண்டு உள்ளது என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications