அயோத்தியில் பிரிட்டன் கம்பெனியான டிரஃபல்கர் ஸ்கொயர் கேபிட்டல் (Trafalgar Square Capital) அதிநவீன பாதுகாப்பு பிரிவுகளைத் தொடங்குவதற்காக ரூ.75,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. இந்தியாவில் தனியொரு மாவட்டத்தில் செய்யப்பட்ட மிகப் பெரிய முதலீடு இதுவாகும்.
பிரிட்டிஷ் நிறுவனமான ட்ரஃபல்கர் ஸ்கொயர் கேபிட்டலின் ரூ. 75,000 கோடி முதலீட்டை பெற்றதன் மூலம் அயோத்தி ஒரு மகத்தான பொருளாதார மாற்றத்தின் உச்சத்தை அடைந்துள்ளது. இந்த மகத்தான முதலீடு அயோத்தியில் அதிநவீன பாதுகாப்பு உற்பத்தி தளத்தை நிறுவ உள்ளது.

ஆன்மீகத்தை தாண்டி தொழில்துறை வளர்ச்சிக்கான உலகளாவிய இடமாக அயோத்தியின் நிலையை உறுதிப்படுத்தும் வகையில், டிராஃபல்கர் ஸ்கொயர் கேபிட்டல் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுடன் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டு உள்ளது.
டிரஃபல்கர் ஸ்கொயர் கேபிட்டல், வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) கொள்கையின் கீழ் உத்தரபிரதேசத்தில் முதலீட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தும் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது தவிர ஹாங்காங்கை தளமாகக் கொண்ட டவுஷன் இன்டர்நேஷனல் குரூப், ஆர்ஜி குரூப், ஆஸ்டின் கன்சல்டிங் குரூப், கோசிஸ் குரூப், இந்தோ ஐரோப்பிய சேம்பர் ஆஃப் ஸ்மால் அண்ட் மீடியம் எண்டர்பிரைசஸ், ஏபிசி க்ளீன்டெக் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த யூனிகார்ன் எனர்ஜி ஆகியவையும் இதில் அடங்கும்.
உத்தரப் பிரதேசத்தின் தொழில்துறை அமைச்சர் நந்த கோபால் நந்தி இது பற்றி கூறுகையில், டிரஃபல்கர் ஸ்கொயர் கேபிட்டலின் இந்த மகத்தான முதலீடு அயோத்தி மற்றும் முழு மாநிலத்துக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
இது உத்தரப் பிரதேசத்தின் வணிக நட்பு கொள்கைகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான பார்வையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முதலீடு ஒரு வலுவான வணிகச் சூழலை வளர்ப்பதற்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மாநிலத்தின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது என்று நந்தி கூறினார்.
அயோத்தி ஒரு கலாசார மற்றும் மத மையம் மட்டுமல்ல, இப்போது பொருளாதார சக்தியாக மாறி, உலக அரங்கில் முக்கிய நிறுவனங்களை ஈர்க்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஜெர்மனியின் யூனிகார்ன் எனர்ஜியும் உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்யத் தயாராக உள்ளது, லக்னோ மற்றும் ஜான்பூரில் தோராயமாக ரூ. 42,000 கோடி மதிப்பிலான இரண்டு சோலார் எனர்ஜி திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த முயற்சிகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் வகையில் சுமார் 2,200 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் சோலார் எனர்ஜி இன்வெஸ்ட்மெண்ட் தொடர்பாக ஜிஎம்ஆர் குரூப் ரூ.40,000 கோடிக்கான சோலார் எனர்ஜி திட்டத்துக்காக கையெழுத்திட்டுள்ளது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications