பல்வேறு தரப்பினரும் பட்ஜெட்டினை பற்றி தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். இது ஒரு புறம் நீண்டகால பட்ஜெட்டாக பார்க்கப்பட்டாலும், சாமானியர்களுக்கும், சம்பளதாரர்களுக்கும் பலனில்லாத பட்ஜெட் என விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த பட்ஜெட்டால் சங்கிலித் தொடராக பலன் காண போகும் நிறுவனங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இதில் உள்கட்டமைப்பு துறை, ஹெல்த்கேர்/பார்மா துறை, புதுபிக்கத்தக்க ஆற்றல், கிராமம்/விவசாயம் உள்ளிட்ட சில துறைகள் அடங்கும்.
பட்ஜெட்டில் கவனம்
உள்கட்டமைப்பு துறையை பொறுத்த வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள மூலதன செலவினம், சாலை மற்றும் கப்பல், மின்சார வாகனங்கள், புதுபிக்கதக்க ஆற்றல் உள்ளிட்ட துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டது. இது கொரோனாவால் துவண்டு போயிருந்த பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பயன்படும் என அரசு நம்புகிறது.
முதலீட்டாளர்களின் நம்பிக்கை
ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறித்தான நடவடிக்கை, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, சமீபத்தில் சந்தையானது பலத்த சரிவினைக் கண்டது. எனினும் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்து வந்தது.
கடந்த 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடந்த எட்டு ஆண்டுகளில், மூன்று ஆண்டுகளில் மட்டுமே சென்செக்ஸ் பட்ஜெட்டிற்கு பிறகு அதிகரித்துள்ளது. மீதமிருக்கும் 5 ஆண்டுகள் சரிவு அல்லது மாற்றமில்லாமல் தான் காணப்பட்டது. ஆக இந்த ஆண்டில் பட்ஜெட்டில் சில துறைகளை ஊக்குவிக்கும் விதமாக வந்துள்ள நிலையில், பொறுத்திருந்து பார்ப்போம்.
முக்கிய எதிர்பார்ப்பு
இதற்கிடையில் ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு மற்றும் முதலீட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆக அதனை நிறைவேற்றும் வகையில் தான் அரசும் முலதன செலவினங்களை அதிகரித்துள்ளது. ஆக நிச்சயம் இது வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குகள் பரிந்துரை
இந்த நிலையில் வாங்க வேண்டிய பங்குகளாக தரகு நிறுவனங்கள் லிஸ்டினை வெளியிட்டுள்ளன.
இதில் ஐசிஐசிஐ வங்கி, MTAR டெக்னாலஜிஸ், எல் &டி, பாலிகேப் இந்தியா, அகர்வால் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன், கதி (Gati), போரோசில் ரீனிவபிள், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், பிரெஸ்டீஜ் எஸ்டேட், சிஇ இன்ஃபோ சிஸ்டம்ஸ், ஹெச்எஃப்சிஎல் மற்றும் பாலாஜி, அமீன்ஸ், டிலிங்க், கெயில், லக்ஷ்மி ஆர்கானிக்ஸ், பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகளை பட்டியலிட்டுள்ளனர்.
இதனையும் பாருங்க
மேலும் டாடா பவர், டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், பீனிக்ஸ் மில்ஸ், கிரீன் பேனல் இண்டஸ்ட்ரீஸ், அல்கெம், ப்ளோராகெமிக்கல்ஸ், டாபர், பிரின்ஸ் பைப்ஸ், ஜிஆர் இன்ஃப்ரா புராஜக்ட்ஸ், மைண்ட் ட்ரீ, டிசிஎஸ், எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எண்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், அசோக் லேலாண்ட், பார்தி ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ், எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், இன்ஃபோசிஸ், உள்ளிட்ட பங்குகளையும் வாங்கி வைக்கலாம் என ஐசிஐசிஐ ஈக்விட்டி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications