சாதிக்க இடமோ அல்லது பொருளோ தேவையில்லை என்பதை ஹரியானாவைச் சேர்ந்த இருவர் நிரூபித்து காட்டியுள்ளனர். நவீன் மற்றும் பிரவீன் சிந்து என்ற 2 சகோதரர்கள் இணைந்து தங்கள் வீட்டின் சிறிய அறையில் உலகில் மிகவும் விலை உயர்ந்த மசாலா பொருளான குங்குமப்பூவை வளர்த்து லட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் எப்படி இதை செய்கின்றனர் குங்குமப்பூ சாகுபடியில் எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
குங்குமப்பூ மிகவும் விலை உயர்ந்த பொருட்களில் ஒன்று. ஆனால் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அழகு சாதனப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுவது முதல் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தருவது வரை பலவற்றுக்கும் குங்குமப்பூ பயன்படுகிறது. இதய ஆரோக்கியம், கண் ஆரோக்கியம், மனநிலை மேம்பாடு, வெயிட் லாஸ் போன்ற பலவற்றுக்கும் குங்குமப்பூ பயன்படுகிறது.

இதன் ஆரோக்கிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு எம்டெக் பட்டதாரியான பிரவீன் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த நவீன் இணைந்து பாரம்பரிய விவசாய முறைகளுக்கே சவால் விடும் வகையில் வெறும் 225 சதுர அடி அறையில் குங்குமப்பூவை வீட்டிற்குள் வளர்த்து புதுமையான முறையில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
தாய்லாந்தில் முறையான பயிற்சி பெற்ற பிறகு காஷ்மீரில் இருந்து 100 கிலோ குங்குமப்பூ விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.250 கொடுத்து வாங்கி ரூ.13 லட்சம் முதலீட்டில் தங்கள் வீட்டின் மேல் கூரையில் ஒரு அதிநவீன ஆய்வகத்தை நிறுவியுள்ளனர்.
பொதுவாக குங்குமப்பூ வளர்ப்பதற்கு 10 டிகிரி முதல் 20 டிகிரி வரையிலான வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆனால் இந்த சகோதரர்கள் சூரிய ஒளியைத் தவிர்த்து LED விளக்குகளைப் பயன்படுத்தி விவசாயத்தை செய்துள்ளனர். மேலும் ஏரோபோனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு சில மாதங்களிலேயே 1.5 கிலோ குங்குமப்பூவை உற்பத்தி செய்துள்ளனர்.
உயர்தர ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ப்ரீமியம் குங்குமப் பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை இருக்கும். ஆனால் வயல்வெளியில் வளர்க்கப்படும் குங்குமப்பூவின் விலை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தான் இருக்கும். எனவே இதை தெரிந்து கொண்டு ப்ரீமியம் குங்குமப்பூவை வளர்க்கும் யுக்திகளை இந்த 2 சகோதரர்களும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சகோதரர்கள் இணைந்து தங்களுடைய சொந்த ப்ராண்டான அமரத்வா அக்ரோ என்ற பிராண்டையும் நிறுவியுள்ளனர். உள்நாட்டிலும் குங்குமப்பூக்களை சப்ளை செய்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா, யூகே போன்ற சர்வதேச சந்தைகளுக்கும் தங்கள் பிரீமியம் குங்குமப்பூக்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
நவீன் மற்றும் பிரவீன் சிந்து இணைந்து சிறிய இடத்தை பயன்படுத்தி தங்களுடைய பெரிய கனவை நினைவாக்கியுள்ளனர். அவர்களுடைய புதுமையான அணுகுமுறை மற்றும் விடாமுயற்சி இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications