ஒரு மாதத்தில் 120% உயர்ந்த எம்டிஎன்எல் நிறுவன பங்கு.. விளக்கம் கேட்கும் மும்பை பங்குச்சந்தை..!

எம்டிஎன்எல் எனப்படும் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரு மாத காலத்தில் சுமார் 120 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை சார்பில் இந்நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்டிஎன்எல் நிறுவன பங்குகளை பொறுத்தவரை தொடர்ந்து 11ஆவது நாளாக வளர்ச்சி பாதையிலேயே இருந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை அன்று மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 5 சதவீதம் உயர்வு கண்டு 97 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையில் லாக் ஆனது. இதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 119.74 சதவீதம் என இந்த பங்கின் மதிப்பு உயர்ந்துள்ளது.

ஒரு மாதத்தில் 120% உயர்ந்த எம்டிஎன்எல் நிறுவன பங்கு.. விளக்கம் கேட்கும் மும்பை பங்குச்சந்தை..!


இதனிடையே நிதி நெருக்கடியில் இருக்கும் எம்டிஎன்எல் நிறுவனத்திற்கு அரசு உடனடி பத்திர தொகையாக 5.1 பில்லியன் டாலர்களை வழங்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்த செய்தி தொடர்பாக மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் எம்டிஎன்எல் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடுகளை எம்டிஎன்எல் நிறுவனத்திடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கு எம்டிஎன்எல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அண்மை காலமாக இந்த நிறுவன பங்குகள் வர்த்தகமாகும் அளவு கணிசமாக உயர்ந்து வருவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான எம்டிஎன்எல் 2024 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாக நிதி அறிக்கை வெளியிட்டது. இது முந்தைய ஆண்டை விட அதிகம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் நிறுவனத்திற்கு அதன் செயல்பாடுகளில் இருந்து கிடைத்த வருமானம் 5 சதவீதம் என குறைந்துள்ளது. இதனிடையே 2025-ஆம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வரும் 13ஆம் தேதி வெளியிட இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5284 கோடி ஆகும். இந்த பங்கின் ஃபேஸ் வேல்யூ 10 , இந்த நிறுவன பங்கில் 56 சதவீதம் புரமோட்டர்களிடம் இருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்கள் 29 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 19 ரூபாய், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 97 ரூபாய். ஓராண்டு காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு 395 சதவீதம் லாபத்தை தந்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+