இந்தியாவின் முன்னணி பங்கு சந்தையானது மும்பை பங்கு சந்தையானது கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகரலாபம் 32.57 கோடி ரூபாயினை ஈட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டில் நிகர நஷ்டமாக 1.31 கோடி ரூபாயாக இருந்ததாக என்எஸ்இ- க்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே போல செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாயானது 27% அதிகரித்து 152.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 119.56 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்ட் பரிந்துரை
இதனையடுத்து இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவானது ஒரு பங்குக்கு 21 ரூபாய் டிவிடெண்டாக அளிக்க பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து விரைவில் இறுதி அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் 144.90 கோடி ரூபாய் நிகர லாபத்தினை கண்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 122.27 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
வருவாய் எவ்வளவு?
செயல்பாட்டின் மூலம் வருவாயானது 11% அதிகரித்து கடந்த நிதியாண்டில் 501.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 450.51 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் வலுவான செயல்பாட்டின் மூலமாக இந்த நிறுவனம வலுவான வருவாயினை கண்டுள்ளது. இதில் குறிப்பாக BSE StAR MF வணிகமானது 63% வளர்ச்சி கண்டு, 9.38 கோடி ரூபாயாக அதன் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 5.75 கோடி ரூபாயாக இருந்தது.
மார்கெட் செக்மண்டில் நல்ல வளர்ச்சி
இதே பிஎஸ்இ மார்கெட் செக்மண்டில் முந்தைய ஆண்டை காட்டிலும் 81.8% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிஎஸ்இ-யின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆஷிஷ்குமார் சவுகான் கூறுகையில், பல ஆண்டுகளாக தனது தடையற்ற சேவையை பிஎஸ்இ வழங்கி வருகின்றது. இது இந்தியாவில் தொழில் நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட வர்த்தக தளமாக தன்னை நிரூபித்துள்ளது.
தினசரி பரிவர்த்தனை எப்படி?
மார்ச் காலாண்டில் சராசரியாக தினசரி கரன்சி டெரிவேட்டிவ்ஸ் செக்மண்டில், பரிவர்த்தனை 20,913 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கமாடிட்டி டெர்வேட்டிவ்ஸில் சராசரி பரிவர்த்தனை 2,392 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதே ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் செக்மண்டில் 2.78 ட்ரில்லியன் ரூபாயாகவும் அதிகரித்துள்லதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications