மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) செவ்வாய்க்கிழமை அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி ஷிவ் குமார் பாண்டே மற்றும் சிறப்புத் திட்டங்களின் தலைவர் நயன் மேத்தா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததாக அறிவித்தனர்.
BSE இன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி ஷிவ்குமார் பாண்டே, மற்றொரு தொழில் வாய்ப்பைத் தொடர ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா டிசம்பர் 4, 2023 அன்று வணிக நேரத்தின் முடிவில் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கிடையில், பிஎஸ்இயின் தலைமைத்துவத்தில் உள்ள மற்றொரு பிரபலமான நபரான நயன் மேத்தா, தனிப்பட்ட மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். மும்பை பங்குச்சந்தை பணியில் இருந்து அவர் அக்டோபர் 12, 2023 அன்று வணிக நேரத்தின் முடிவில் இருந்து நடைமுறைக்கு வரும்.
இருவரின் ராஜினாமா அறிவிப்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பல கேள்விகளை எழுப்பினாலும், உயர் அதிகாரிகளின் ராஜினாமா அவ்வப்போது நடக்கும் விஷயமாக இருந்தாலும் இருவரும் நேரத்தில் ராஜினாமா செய்துள்ளதால் பல கேள்விகளை எழுப்பியது.
இந்த இரண்டு முக்கிய நிர்வாக பதவிகளுக்கு பொருத்தமான நபர்களை கண்டறியும் செயல்முறையை இந்திய பங்குச்சந்தை இப்போது தொடங்க உள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 78.22 புள்ளிகள் சரிந்து 65,945.47 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் சென்னசெக்ஸ் குறியீட்டுன் டாப் 30 நிறுவன பங்குகளில் சுமார் 15 நிறுவனங்கள் சரிவில் உள்ளது. இன்று ஐடி மற்றும் வங்கி பங்குகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications