இந்திய பங்குச் சந்தைகள் எதிர்பார்த்தப்படியே பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. சென்செக்ஸ் குறியீடு வர்த்தகம் துவங்கும் போது சுமார் 3,100 புள்ளிகள் வரை சரிந்து துவங்கியது, ப்ரீ மார்கெட் சந்தையில் 3900 புள்ளிகள் வரையில் சரிந்து காணப்பட்டது. இந்த தடாலடி சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்செக்ஸ் குறியீடு மட்டும் அல்லாமல் நிஃப்டி குறியீடும் 21,900 புள்ளிகளுக்கு கீழே சரிந்ததுள்ளது. இந்த திடீர் சந்தை திருத்தம், பல்வேறு துறைகளை மோசமாக பாதித்துள்ளது, குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் அதிகம் கொண்ட துறைகள், ஏற்றுமதியை முக்கிய வர்த்தகமாக கொண்ட நிறுவனம், துறைகள் இன்று அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியான துறையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான விற்பனை அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இன்றைய வர்த்தக துவக்கத்தில் சில துறைகள் 8% வரை பெரும் சரிவை சந்தித்தன. சந்தை ஏற்ற இறக்கத்தின் முக்கிய குறிகாட்டியான இந்தியா VIX, 55% வரை உயர்ந்து 21.79 புள்ளிகளை எட்டியது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதேபோல் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை உருவாகியிருக்கும் காரணத்தால் அடுத்த சில நாட்களுக்கு இந்த சரிவு இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய பங்குச்சந்தை சரிவுக்கு முழுக்க முழுக்க அமெரிக்க அரசு விதித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி தான் முக்கிய காரணமாக உள்ளது. இரண்டு நாள் விடுமுறைக்கு பின்பு துவங்கிய உலகளாவிய பங்குச்சந்தையில் பெரும் இருப்பதை சந்தித்துள்ளது. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தையும் சரிந்துள்ளது.
இதில் முக்கியமாக ஜப்பான் பியூச்சர்ஸ் சந்தை அதிகப்படியான சரிவுக்கு சென்ற காரணத்தால் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது. 3 நாள் விடுமுறைக்கு பின்பு துவங்கிய சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகள் 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்தது. இதேபோலி சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 34 சதவீத வரியை விதித்துள்ளது.
உள்நாட்டு தாக்கம், சர்வதேச தாக்கம் என அனைத்தும் ஒன்றிணைந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை இன்று சந்தித்தன.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications