இந்திய பங்குச் சந்தைக்கு வரலாற்றில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வு நடக்கவுள்ளது. ஆம் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், BSE மற்றும் NSE ஆகிய இரு பங்குச் சந்தைகளும் அன்று வர்த்தகத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி இருந்தது, இதை மத்திய அரசு முடிவு செய்து அறிவித்த நிலையில், அடுத்த கேள்வியாக முதலீட்டு சந்தை திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது இதற்கும் விடை கிடைத்திருக்கும் வேளையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பட்ஜெட் நாள் வர்த்தகத்திற்கு தயாராகும் நேரம் வந்துவிட்டது.

இரு பங்குச் சந்தை அமைப்புகளும் இன்று தனித்தனியாக வெளியிட்ட அறிக்கைகளில், பட்ஜெட் தினமான ஞாயிற்றுக்கிழமை பங்கு வர்த்தகம் நடைபெறும் என்று உறுதிப்படுத்தியுள்ளன. வர்த்தக நேரங்கள் வழக்கம்போலவே இருக்கும் எனவும் விளக்கியுள்ளது.
ஆதாவது காலை 9 மணி முதல் 9:08 மணி வரை ப்ரீ-ஓபன் சந்தை நடைபெறும். இயல்பான தினசரி வர்த்தகம் காலை 9:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை தொடரும் என தெரிவித்துள்ளது.
மேலும் BSE சுற்றறிக்கையில், "T+0 செட்டில்மென்ட் மற்றும் செட்டில்மென்ட் டீபால்ட் ஏலம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1, 2026) நடைபெறாது" என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் பிப்ரவரி 1 ஆம் தேதி எஃப்ஆண்ட்ஓ (F&O) மற்றும் commodity derivatives ஆகியவையும் அன்று திறந்திருக்கும்.
பொதுவாக பங்குச் சந்தைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். சில பொது விடுமுறை நாட்களிலும் வர்த்தகம் நிறுத்தப்படும். ஆனால் பட்ஜெட் தினத்தில் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகம் நடத்துவது எப்போதும் இல்லாத ஒன்று. 2000-க்குப் பிறகு முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.
கடைசியாக 2025-ல் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு முன் 2015-ல் அருண் ஜெட்லி பட்ஜெட் சனிக்கிழமை (பிப்ரவரி 28) தாக்கல் செய்தார். இதுவரை ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில்லை, இதுவே முதல் முறை என்பதால் இந்த பட்ஜெட் தொடர்ந்து ஸ்பெஷலாக மாறி வருகிறது.

பட்ஜெட் தினத்தில் பங்குச் சந்தை திறந்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன?
பட்ஜெட் என்பது நாட்டின் பொருளாதார கொள்கைகள், வரி மாற்றங்கள், செலவு திட்டங்கள், தொழிற்துறை சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அறிவிக்கும் மிக முக்கியமான விஷயமாகும். இந்த அறிவிப்புகள் பங்குச் சந்தை, வட்டி விகிதங்கள், துறை சார்ந்த வளர்ச்சி, நிறுவனத்தின் லாபம், முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றை உடனடியாக பாதிக்கும். எனவே, பட்ஜெட் அறிவிப்புகளை உடனடியாக சந்தை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சந்தை மூடப்பட்டிருந்தால், பட்ஜெட் அறிவிப்புகளுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. இது சந்தை ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இது முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம்.
எனவே, பட்ஜெட் தினத்தில் சந்தை திறந்திருப்பது மூலம் முதலீட்டாளர்களுக்கு உடனடியாக இழப்பை குறைக்க எதிர்வினையாற்ற வாய்ப்பை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் பட்ஜெட் நாளில் சந்தை நகர்வுகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பங்குச் சந்தை நிலநடுக்கங்கள்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை அதிர வைத்த 5 பெரும் சரிவுகள்?!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications